பக்கம்:மலர் மணம்.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மண்ம் 47.

காதில் விழுந்தது. இருவர் வாழ்த்துக்களிலும் எவ்வளவு ஒற்றுமை இருவருக்கும் எவ்வளவு ஆர்வம்-எவ்வளவு அக்கரை எத்துணை பரிவு-எத்துணை பற்று !

அந்த வாழ்த்துக்குரல் யாருடையது என்று திரும்பிப் பார்த்தேன்-தெரியவில்லை. குரல் வந்த திக்கு நோ க் கி ச் சென்றேன் - தெரியவேயில்லை. பெண்கள் நின்று கொண்டிருக்கும் பகுதியிலிருந்துதான் அந்தக் குரல் வந்திருக்கிறது-என்பது மட்டும் நன்றாகத் தெரிகிறது. அது ஒரு பெண்ணின் குரல்தான்என்பதும் தெளிவாகப் புரிகிறது. யார் அந்தப் பெண் ? என் நினைவு அலைகள் அடுக்கடுக்காக எழுந்து எங்கெங்கோ ஒடித்திரும்பின.

அந்தக்குரல், இதற்குமுன் கேட்டறிந்ததாக-பழகி யறிந்ததாகவே தென்பட்டது. சற்று சிந்தித்துப் பார்த்தேன். ஆம், அது அல்லியின் குரல்தான் ! “ நான் எங்கிருந்தாலும், மலர்மணம் கடக்கும்போது வாழ்த்து கூற வந்துவிடுவேன் ‘ என்று முன்பு ஒருமுறை அவள் சொல்லியிருந்தாள். அதன்படியே இப்போது அவள் வந்துவிட்டாள். அதுவுமன்றி, அவள் திருத்தணிகைப் பக்கம் இருப்பதாகக் காற்று வாட்டத்தில் சில திங்களுக்கு முன்பு யாரோ சொல்லக் கேள்விப்பட்டிருந்த தல்ைதான், நான் திருத்தணிகையில் திருமணத்திற்கு ஏற்பாடு செய்தேன். அவள் இந்தப்பக்கம் இருப்பது உண்மையானல், மலர்மணம் காண வந்தாலும் வரலாம் என்ற அவாதான் என்னே இவ்வாறுசெய்யத் துண்டியது என் எண்ணப்படியே அவள் வந்தும், இருக்கிருள். ஆல்ை கண்ணெதிரில் காணவில்லையே!

16

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலர்_மணம்.pdf/249&oldid=656261" இலிருந்து மீள்விக்கப்பட்டது