பக்கம்:மலர் மணம்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மணம் 23

புகைவண்டி நிலையத்திலிருந்து எங்கள் வீட்டிற்குச் செல்ல வேண்டுமானுல், அல்லியின் வீட்டு வழியாகத் தான் போகவேண்டும். அதுதான் நேர்வழி-சுருக்கு வழியுங் கூட. ஆம், அல்லி வீட்டை நெருங்கிவிட்டேன். தெருவாயிற்படியில் யாரேனும் இருக்கின்றார்களா என்று உற்று நோக்கினேன். ஒருவரும் இல்லை. கதவு சாத்தி யிருந்தது. நிற்கவும் மனமில்லாமல் நடக்கவும் மனமில்லாமல் அசைந்துகொண்டிருந்தேன். அத்தான் என்ற அமிழ்த ஒலி பலகணியிலிருந்து வந்து காது வழியாக என்னுள் புகுந்து சிறு நரம்புகளுக்குள் எல்லாம் இனித்தது. தெருப்பக்கத்து அறைப் பலகணியை நெருங்கினேன். ‘ அல்லி ”! ‘ அத்தான் ‘'’ ‘'’ அல்லி'! ‘ அத்தான் ‘ என்ற தழுதழுத்த மெல்லிய ஒலிகள் பரிமாறிக் கொள்ளப்பட்டன. ஒருசில விநாடிகள், மெய்ம்மறக்க அமைதி நிலவிற்று.

“ பாட்டி, தம்பி, தங்கை மூவரும் கூடத்து அறையில் தூங்கிக்கொண் டிருக்கிறார்கள். வேறு யாரும் வீட்டில் இல்லை. நான் தெருக்கதவைத் திறக்கிறேன். உள்ளே வாருங்கள். பின்கட்டிற்குச் சென்று பேசிக்கொள்ள லாம் ‘.

‘ சரி, கதவைத் திற ”.

மெதுவாகக் கதவு திறக்கப் பட்டது. நான் உள்ளே சென்று மீண்டும் கதவைத் தாளிட்டேன். அஞ்சி அஞ்சி அதிர்ந்து அதிர்ந்து நடந்த அல்லியைப் பின் தொடர்ந் தேன். பின்கட்டுக் கூடத்தை யடைந்தோம். சிறிய மங்கலான மின்விளக்கு போடப்பட்டது. அங்கிருந்த ஒரு நாற்காலியில் அல்லி என்ன அமரச் செய்தாள் ; பக்கத்தில் சுவரோடு சுவர் ஒட்டிக்கொண்டு மான்போல

2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலர்_மணம்.pdf/25&oldid=656262" இலிருந்து மீள்விக்கப்பட்டது