பக்கம்:மலர் மணம்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மணம் 25

என்று கேட்டார். நான் உண்மையைச் சொன்னேன். கம் முதலாளி பெயரைக் கேட்டதும் திடுக்கிட்டவராய், சரி நீ போ போ என்று சொல்லிவிட்டார். நான் வேகமாக வண்டியை ஒட்டிக்கொண்டு வந்து விட்டேன்என்று அவன் தெரிவித்து விட்டு, இப்போதுதான் வண்டியைக் கொட்டகையில் விட்டு, தன் குடிசைக்குப் படுக்கப் போய்விட்டான். விளக்கு, பூட்டாங்கயிறு முதலியவற்றை வாங்கி நான் உள்ளே வைத்துவிட்டு, கதவைத் தாளிட்டுக் கொண்டேன். அவனால் குறிப்பிடப் பட்டவர் தாங்க ளாக இருக்கலாம் என்ற எண்ணம் எனக்குத் தோன்றிற்று. நீங்கள் நடந்து வரலாம்; வரச் சிறிது நேரம் பிடிக்கும். எப்படியும் இந்த வழியாகத்தான் வருவீர்கள். சிறிது நேரம் காத்திருந்து பார்ப்போம் என்று எண்ணி, தெருப் பக்கத்து அறையின் பலகணியை ஒருக்களித்து வைத்து உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தேன். எண்ணியது கடந்தது.

“மாமாவும் அத்தையும் இந்நேரத்தில் புறப்பட்டு எங்கே செல்கிறார்கள்?”

பரிதிபுரத்தில் நண்பர் ஒருவர் வீட்டில் வைகறை யில் திருமணமாம். அதற்காகச் சென்றுள்ளார்கள்.”

“ எப்போது வருவார்களாம் ?”

“ காலேயில் வந்து விடுவார்கள். விடிந்தால் நம் ஊரில் ‘ஊருணிப் பொங்கல் விழா அல்லவா?”

2-)

“நல்லது. என்னே வரச்சொல்லி ஏன் விரைவுக்

கடிதம் எழுதிய்ை?"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலர்_மணம்.pdf/27&oldid=656266" இலிருந்து மீள்விக்கப்பட்டது