பக்கம்:மலர் மணம்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மணம் 27

தலையில் விடிய இருக்கிறதோ ! என்று எண்ணி ஏங்கிப் பெரு மூச்சு விடுவதுண்டு. ஆல்ை, இப்போது ஒர் அழகுத்தேவதை என்முன் நின்றுகொண் டிருக்கிறதே. கான் இதுவரை பார்த்துள்ள அழகிகளுக்கு எந்த வகை யிலும் குறையாத-ஏன், சிறந்த ஒரு தங்கச் சிலையை நான் கண்குளிரக் கண்டுகொண் டிருக்கின்றேனே. இது நனவா ? கனவா?

கான் முன்றாண்டுகளுக்கு முன் அடித்து விட்டுப் போன அல்லியா இவ்வுருவம் ? எவ்வளவு மாற்றம்! என்ன பொலிவு 1 எத்தனை கவர்ச்சி ! -

நா ையில்லாமல், ஒரு கவிஞரோ எழுத்தாளரோ அல்லி போன்ற பெண்களின் முன் நின்றால், ஒவ்வோர் உறுப்புக்கும் உவமை கொடுத்து வருணிக்கத் தொடங்கி விடுவார். நல்ல வேளையாக, நான் ஒரு பி. ஏ. வகுப்பு மாணவன யிருந்ததால் அல்லி தப்பித்தாள். அல்லியை நான் உறுப்பு உறுப்பாகப் பிய்த்துச் சிதைத்துக் காணுமல், முழுப் பொருளாகவே கண்டு களிக்கிறேன். ஓர் அழகு மலரை இதழ் இதழாகப் பிய்த்துக் காண் பவனையோ-வருணிப்பவனையோ உண்மையான சுவைக் கலைஞகை நான் மதிப்பதில்லை. இலக்கியங்களிலோ எழுத்தாளர்களின் ஏடுகளிலோ, மங்கையரைப் பற்றிப் புனையப்பட்டுள்ள பாதாதி கேச-கேசாதி பாத வருணனை களே, அதாவது, உள்ளங்காலிலிருந்து உச்சிவரை-உச்சி யிலிருந்து உள்ளங்கால்வரை ஒவ்வோர் உறுப்பினையும் அக்கு வேறு ஆணி வேருக ஆப்பரேழ்சன் செய்து தனித் தனியாகப் படைக்கப்பட் டுள்ள கற்பனைகளை எப்போதுமே நான் விரும்புவதில்லை-சுவைப்பதில்லை. விரும்பாதது மட்டுமன்று : சுவைக்காதது மட்டுமன்று; அம்முறையினை மிக மட்டமாகக் கருதுவது முண்டு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலர்_மணம்.pdf/29&oldid=656268" இலிருந்து மீள்விக்கப்பட்டது