பக்கம்:மலர் மணம்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 மலர்

“நான் உங்களைத் தவிர, வேறு யாரையும் மணந்து கொள்ள மாட்டேன்.”

“ அல்வி”

“ அத்தான் ”

‘ உண்மையாகவா !”

“ ஆம் ”

“ஏன் இந்த முடிவுக்கு வந்தாய் ?” “ பின் நான் எந்த முடிவுக்கு வரவேண்டுமாம் ?”

‘நம் இருவரால் தானே நம் குடும்பங்களின் உறவே குலேந்து விட்டது. நான் இதற்கு முன்பு உன்னைப் படாத பாடு படுத்தி யிருக்கிறேனே. அப்படியிருக்க, எப்படி என்னை நீ விரும்புகிறாய்?”

‘முன்றாண்டுகளுக்கு முன் நாம் இருவரும் இதே இடத்தில் விளையாட்டாக வம்பு பண்ணிக் கொள்ள, அப்பா உங்களை நன்றாக அடித்து விட்டார். நீங்கள் போனபின், அம்மாவும் பாட்டியும் அப்பாவுக்குத் தெரி யாமல் என்னே வைதார்கள். அத்தானிடம் ஏன் வம்புக் குப் போய்ை? அத்தான் ஏதாவது செய்திருந்தாலும் அப்பாவிடம் அவனைப் பற்றிக் கோள் மூட்டலாமா? இப் போது குடும்ப உறவே அற்றுப் போயிற்றே என்றெல் லாம் சொல்லி என்னை வாட்டி வதக்கிவிட்டார்கள். நான் என் தவறை உணர்ந்தேன். நீங்கள் அடிபட்டதை எண்ணி யெண்ணி அழுதேன். அப்போதிருந்து உங்கள் மேல் எனக்கு ஒருவகைப் புது உணர்வு தோன்றிற்று. நீங்கள் இங்குவராமல் இருக்க இருக்க, உங்களைக்காணுது போகப் போகப் பற்று பெருகிக்கொண்டே யிருந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலர்_மணம்.pdf/34&oldid=656274" இலிருந்து மீள்விக்கப்பட்டது