பக்கம்:மலர் மணம்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மணம் 33

நீங்கள் சில முறை இந்தத் தெரு வழியாகப் போக நான் பார்த்திருக்கிறேன். மாடியறையின் கதவில் ஒளிந்து நின்று, உங்கள் உருவம் மறையும் வரையும் பார்த்துப் பெரு மூச்சு விட்டிருக்கிறேன். நீங்கள்தான் என்னை அறவே மறந்துவிட்டிருக்கிறீர்கள்”

“மறந்திருந்தால் இப்பொழுது ஓடி வருவேன?”

“என் கடிதத்தை மதித்து வருவீர்களோ-அல்லது புறக்கணித்து விடுவீர்களோ என்று ஐயப்பட்டுக் கொண்டிருந்தேன். எனது நல்லகாலம் வந்துவிட் loff;Git.”

“எனது கெட்டகாலங்தான், நான் வந்திருப்பது.”

‘ஏன் அப்படிச் சொல்லுகிறீர்கள்?”

“உன் அப்பாவோ உன்னே வேறொருவருக்குக் கட்டிக் கொடுக்க ஏற்பாடு செய்திருக்கிறார். நீயோ என்னை

மணந்துகொள்ளப் போவதாகச் சொல்கிறாய். நடுவிலே, நான் என்ன செய்வது!”

“என்னை மணந்து கொள்ள விருப்பமில்லையா?”

‘இல்லாமலா வந்தேன்?”

“அப்படியென்றால் அதற்குவேண்டிய ஏற்பாடுகளைக் கவனியுங்களேன். நானே பெண்பிள்ளை; நான் என்ன செய்யமுடியும்? நீங்கள் எதுவும் முடிக்கலாம்.”

“அது நம் கையிலா இருக்கிறது. செடியின் கீழ்ப் புல்லைப் போல, நாம் பெற்றாேரின் கீழ்ப் பிள்ளைகளாக இருக்கிருேம். அதிலும் கம் பெற்றாேரோ பூசலும் புகைச்சலுமா யுள்ளனர். என் தந்தையார் அரைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலர்_மணம்.pdf/35&oldid=656275" இலிருந்து மீள்விக்கப்பட்டது