பக்கம்:மலர் மணம்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மணம்

“ அப்படிச் சொல்வதற்கில்லை. சிலர் விடாக்கண்டர் களாக இருக்கவுங் கூடும்’.

‘கான் அதையெல்லாம் எப்படியாவது பார்த்துக் கொள்ளுகிறேன். அத்தான் எனக்கு வாக்குக் கொடுத் தால் போதும். நான் அந்த இன்சுபெக்டருக்கு எனது வெறுப்பை ஒரு கடிதத்தின் மூலம் அறிவித்து விடுவேன். அப்புறம் எல்லாம் சரியாய்ப் போகும். அப்பாவும் பிறகு நம் வழிக்கு வந்துதான் தீரவேண்டும் ”.

“ இவ்வளவு நீக்கு போக்கு துணிவு எல்லாம் உனக்கு எப்படி வந்தன ? எனக்கு மலைப்பாக இருக்.

கிறதே ‘.

‘எல்லாம் நீங்கள் பக்கத்தில் இருக்கிற துணைதான். ஏன் இன்னும் உறுதி சொல்லத் தயங்குகிறீர்கள் ? நீங்கள் ஒத்துக் கொண்டால், நம் திருமணம் நிறைவேறி விட்டதாகவே பொருள். பின்பு எவருக்கும் என்ன மணக்கும் உரிமை கிடையாது ”.

{ { அல்லி ! நீ உணர்ச்சி வயப்பட்டுப் பேசுகிறாய். என்மேல் வருத்தப்படாமல் நான் சொல்வதைக் கவனித் துக்கேள். என் பெற்றாேரும் உடன்பட, உன் பெற். ருே ரும் உ ட ன் ப ட் டா ல் தா ன் நான் உன்னே மனப்பேன் ”.

  • 3

‘’ அத்தான்... ... ...

  • x

‘ஆம் அல்லி. அதுதான் முறை. நேர்வழி.

“நாம் வற்புறுத்தில்ை, பிறகு அவர்கள் வேறு வழியில்லாமல் ஒத்துக்கொள்ள மாட்டார்களா?”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலர்_மணம்.pdf/37&oldid=656277" இலிருந்து மீள்விக்கப்பட்டது