பக்கம்:மலர் மணம்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 மலர்

“அது முறையன்று; நாம் அவர்களே வற்புறுத்தக் கூடாது’ N

‘இப்படிச் சொல்வீர்கள் என்று நான் நினைக்கவே யில்லை அத்தான். கதைகளில்-நாடகங்களில் மட்டு மல்ல; ஊரில்-உலகத்தில் நாமே நேரில் கேட்டும் கண்டும் இருக்கிருேமே”

“என்ன அது?”

“காதலர்கள் தங்களுக்குள் முதலில் உடன்படிக்கை செய்துகொண்டு, பிறகு, கட்டுப்படாத தங்கள் பெற் ருேர்களே எப்படியோ முயன்று தம் வழிக்குத் திருப்பி யிருக்கிறார்களே. சென்ற ஆண்டு அடுத்த தெரு அருணு சல முதலியார் வீட்டில் நடந்தது உங்களுக்கு நினை வில்லையா? நீங்கள் என்ன என்றால் பெற்றாேர்கள் உடன்பட்ட பிறகுதான் உடன்படுவேன் என்கிறீர்களே ? இது நடக்கிற காரியமா? சிந்தித்துச் சொல்லுங்கள் அத்தான் ‘

“புதிதாக ஒன்றும் சிந்திக்க வேண்டியதில்லை. முதலிலேயே சிந்தித்து ஒரு முடிவிற்கு வந்தாய் விட்டது.”

‘என்னை மணப்பதில்லை என்ற முடிவுக்கா?”

‘இல்லை யில்லை; பெற்றாேர் விரும்பும் பெண்ணையே மணப்பதென்ற முடிவுக்கு.”

‘உலகத்திலே பெற்றாேர்கள் பிள்ளையின் விருப்

பத்தை எதிர்பார்ப்பதாகத் தெரிகிறது. நீங்கள் பெற் ருேரின் விருப்பத்தை எதிர் பார்க்கிறீர்களே”.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலர்_மணம்.pdf/38&oldid=656278" இலிருந்து மீள்விக்கப்பட்டது