பக்கம்:மலர் மணம்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மணம் 37

“என்னுடைய கருத்தைச் சொல்லுகிறேன். என் பெருமதிப்பிற்குரிய பேராசிரியரின் கருத்துத்தான் அது. எனக்கு மிகவும் பொருத்தமாகத் தெரிகிறது. பெற் ருேரும் விரும்பவேண்டும்-பிள்ளையும் விரும்பவேண்டும். ஒருவர் விரும்பி மற்றாெருவர் விரும்பவில்லை யென்றால் சரிப்படாது. பிள்ளையின் விருப்பத்துக்குப் பெற்றாேரும் விட்டுக் கொடுக்க வேண்டும்-பெற்றாேரின் விருப்பத் துக்குப் பிள்ளையும் விட்டுக் கொடுக்க வேண்டும்.”

‘நீங்கள் சொல்வது சரிதான். ஆணுல், சிலவிடங் களில் இருவரும் உடன் படாத நிலை உண்டாகி விடுவ துண்டல்லவா ? அந்த நேரத்தில் பெற்றாேர் விருப்பத் தைவிட பிள்ளையின் விருப்பந்தான் முக்கியம். பிள்ளை விட்டுக் கொடுக்காவிட்டால், பெற்றாேர்தான் விட்டுக் கொடுத்தாக வேண்டும். ஏனெனில், மணந்து கொண்டு

5.

வாழப் போவது பிள்ளைதானே’.

‘ இதைத்தான் நான் ஒத்துக் கொள்ள முடியாது.”

‘ஏன் ρ”

‘பிள்ளையின் விருப்பத்தைவிட பெற்றாேர் விருப்பங் தான் பெரிது.”

“ எப்படி ?”

“ எப்படியா ? இதை நான் பகுத்தறிவின் அடிப் படையிலேயே மெய்ப்பித்துக் காட்டுவேன். ஒரு பெண்ணேத் தேர்ந்தெடுக்க ஒரு மாப்பிள்ளையாலோ அல்லது ஒரு மாப்பிள்ளையைத் தேர்ந்தெடுக்க ஒரு பெண்ணுலோ முடியாது. பெற்றேரால்தான் அஃது இயலும். ஒரு பெண்ணுகட்டும், ஆணுகட்டும்-இவர்களின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலர்_மணம்.pdf/39&oldid=656279" இலிருந்து மீள்விக்கப்பட்டது