பக்கம்:மலர் மணம்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 மலர்

கனியிருக்கும் தோட்டக்காரன் உன் அப்பா. கனியின் விலைக்காசு என் தந்தையின் கையில் உள்ளது. நடுவிலே நான். இவ்விருவரும் உடன்பட்டாலேயே நம் திருமணம் கை கூடும். இந்த முடிவை என்னுல் மாற்றவே முடியாது.” -*

‘எனக்காக மாற்றக் கூடாதா?”

“ ஒருவனுக்கு நடுவிலே வரும் கங்கையை விட, பெற்றுப் பேணி வளர்த்து ஆளாக்கிவிட்ட பெற்றாேரே முக்கிய மாணவர்கள். இப்போது நான் வாக்குக் கொடுத்து விட்டால், உனக்கு மிகவும் கடமைப் பட்ட வணுகி விடுவேன். பிறகு அந்தக் கடமையை மீற முடியாது. ஆல்ை, உன்னேவிட நான் என் பெற்றாேருக் கல்லவா மிகுதியும் கடமைப் பட்டிருக்கிறேன். அவர்கள் விரும்பா விட்டால், என் கடமை - வாக்கு எல்லாம் என்னுவது ?”

சிறு பிள்ளைபோல பெற்றேர்களுக்கு அஞ்சு கிறீர்களே”

“அது அச்சமன்று, கடமை.”

‘ ஒவ்வொருவர் காதலுக்காக எவ்வளவோ தியாகம்

செய்திருக்கிறார்களே.”

காதலுக்காகப் பெற்றாேரைத் தியாகம் செய்பவர் கயவர்; பெற்றாேருக்காகக் காதலைத் தியாகம் செய் பவரே கடமை வீரர். பெற்றாேரைப் பிரிந்து அல்லது பிரித்துப் புண்படுத்தி வாழும் வாழ்க்கை ஒரு வாழ்க் கையா ? செய்ந்நன்றி யறியாச் சிலர், பெற்றேர் விரும்பாத பெண்ணே வேறிடஞ் சென்று மணந்து கொண்டு, அவர்களைப் புறக்கணித்து ஆடு மாடுகளைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலர்_மணம்.pdf/42&oldid=656283" இலிருந்து மீள்விக்கப்பட்டது