பக்கம்:மலர் மணம்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மணம் 41

போல் வாழ்கின்றனர். கேட்டால், காதலாம். என்ன புடலங்காய்க் காதல் வேண்டியிருக்கிறது. பெற்றாேருக்கு நிறைவு செய்ய முடியாத ஒருவன் காதலிக்கு மட்டும் கடைசிவரை எங்கே நிறைவு செய்யப் போகிருன்?”

அப்படி யென்றல் நான் தங்களே மறந்து விட வேண்டியது தான?”

“ அப்படி யில்லே. விருப்பமானவரை மணந்து கொள்ளலாம் என்று என் தந்தை ஒப்புதல் கொடுத்து விட்டால், உன் தந்தையும் உடன் பட்டால், உன்னைத் தவிர வேறு யாரையும் மணக்க மாட்டேன். உன்னே மணக்க என் தந்தை உடன்பட வில்லை யாயின், அவர் குறிப்பிடும் பெண்ணைத்தான் நான் மணந்து கொள்வேன்.”

‘இன்னெருமுறை அப்படிச் சொல்லாதீர்கள் அத்தான்.”

என்று சொல்லி விம்மிக்கொண்டே, அல்லி என்னே நெருங்கிள்ை. தன் முழங்கால்களைக் கீழே ஊன்றி உட்கார்ந்தபடி, நாற்காலியின்மேல் அமர்ந்திருக்கும் என் முழங்காலின்மேல் தன் தலையைப் புதைத்துக்கொண்டு, இருகைகளாலும் என்கால்களேக் கட்டிக்கொண்டாள். தேம்பல் நின்றபாடில்லை. கண்ணிரால் என் கால்கள் கனேயத் தொடங்கின. எனக்குச் செய்வதொன்றும் புரிய வில்லை. மணமாகாத ஒரு பெண், இன்னொருவனுக்கு முடிவு செய்யப்பட்டுள்ள ஒரு பெண், பகையாளி மாமாவின் பெண் என்மேல் சாய்ந்துகிடந்தது எனக்குப் பெரிய திகிலே விளேத்தது. அதுவுமன்றி, காம உணர்வு தோன்றியுள்ள காளைப் பருவம் தொடங்கியதிலிருந்து, கான் வயதுவந்த எந்தப் பெண்ணையும் தொட்டறியேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலர்_மணம்.pdf/43&oldid=656284" இலிருந்து மீள்விக்கப்பட்டது