பக்கம்:மலர் மணம்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மணம் 43

“மாற்று வழியா? முயன்று பார்ப்போம்: முடிய வில்லை யென்றால், நம் மனத்தை மாற்றிக் கொள்ள வேண்டியதுதான்.”

“ மறுபடியும் பழைய பாட்டையே பாடுகிறீர்களே அத்தான் ”

“ அல்லி! நான் பகுத்தறிவுக்காரன். ஒரு பொருளுக் குக் குறிவைக்கிருேம். அந்தப் பொருளோ யாரேனும் ஒருவருக்குத்தான் உரியது. அப்பொருள் வேறொரு. வருக்கு உரியதாகி விட்டால்-கமக்குக் கிட்டாதாயின் வெட்டென மறந்துவிட வேண்டியது தான். அதிலேயே கினைப்பை வைத்துக் கொண்டு வாழ்க்கையைப் பாழ் படுத்திக் கொள்ளக் கூடாது. ஒரு பொருள் விலையாகி விட்டால் வேறு பொருளே வாங்கிக்கொள்ள வேண்டியது தான். ஓர் ஆணுக்கு ஒரு பெண்-ஒரு பெண்ணுக்கு ஓர் ஆண். ஒருவர் கிடைக்காவிட்டால் மற்றாெருவரை மணந்து கொண்டு, மனத்தை மகிழ்ச்சியாய் வைத்துக் கொண்டு வாழ வேண்டியதுதான். இதுதான் வாழ்க்கை யிலுள்ள பெரிய இரகசியம். இதை விட்டு விட்டு, காதல் - .ெ வ ங் கா ய ம் - வெண்டைக்காய் என்று சொல்லிக் கொண்டு, வரட்டுப் பிரம்மசாரியாகவே இருப்பதோ, பைத்தியம் பிடித்து அலைவதோ முழுமுழு முட்டாள்தனம். சிலர் த ற் கொ லே யு ம் செய்து கொள்கிறார்கள். அவர்களைப் பற்றி கான் கவலைப் படுவதே யில்லை. அவர்கள் வாழத் தெரியாதவர்கள்இவ்வுலகில் இருக்கத் தகுதியற்றவர்கள் - போக வேண்டியவர்கள்-போய்த் தொலையட்டும். எனவே, சூழ்நிலைக் கேற்பத் தங்களைப் பொருத்திக் கொள்வது தான்-கிடைக்கக் கூடிய வாய்ப்பு வசதிகளுக்கு ஏற்பத் தங்களே அமைத்துக் கொள்வதுதான் அறிவுடைமை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலர்_மணம்.pdf/45&oldid=656286" இலிருந்து மீள்விக்கப்பட்டது