பக்கம்:மலர் மணம்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மணம் 49;

“ இன்றைக்குக் கல்லூரி உண்டா ? அல்லது ஏதாவது விடுமுறையா?” -

‘ கல்லூரி உண்டு; நான்தான் விடுமுறை எடுத்துக் கொண்டு வந்தேன்.”

“எளிதாக விடுமுறை எடுக்க முடிகிறதா ?”

“ முடியாதுதான். இருந்தாலும் இங்கே இரண் டொன்று தெரிந்துகொண்டு போகலாம் என்று நானுக எழுதிப் போட்டுவிட்டு வந்துவிட்டேன்.”

“ அப்படியா ! என்ன அந்த இரண்டொன்று?”

‘அம்மா மிகவும் உடல்நலக் குறைவால் வருந்துவது போன்று சனிக்கிழமை இரவு கனவு கண்டேன். விடிந்: ததிலிருந்து அவர்களைப் பார்க்கவேண்டும் என்று ஒரே ஏக்கமாக இருந்தது. அடுத்தபடியாக, தாங்கள் கற்பகத் திற்குத் திருமண ஏற்பாடு செய்துகொண்டிருப்பதாகக் கேள்விப்பட்டிருந்தேன்-அது வி வர மு ம் தெரிந்து கொள்ள வேண்டுமென்ற ஆவல் அரித்தது. அப்படியே ஊருணிப் பொங்கல் விழாவும் பார்த்ததாக இருக் கட்டும் என்று வந்துவிட்டேன்.”

“ உனது படிப்பு கெட்டுவிடும் என்று கருதித். தான் உனக்கு நான் தெரிவிக்கவில்லை. கைகூடும் போல் தெரிந்தால் நெருக்கத்தில் அழைத்துக்கொள்ள லாம் என்றிருந்தேன். நீயே வந்துவிட்டாய். இதுவும் ஒரு விதத்தில் நல்லதுதான்.”

இதைக் கேட்டதும், ஏன் வந்தாய் என்று திட்டப் போகிறார்கள் என்று அஞ்சிக் கொண்டிருந்த எனக்கு நல்ல உயிர்வந்தது. இப்போது புதுத் தெம்போடு அப்பாவிடம் பேச்சுக் கொடுத்தேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலர்_மணம்.pdf/51&oldid=656293" இலிருந்து மீள்விக்கப்பட்டது