பக்கம்:மலர் மணம்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 மலர்

“ ஏற்பாடு எந்தமட்டும் இருக்கிறது அப்பா’

“இருக்கிறதா எல்லாம் இடிந்துவிட்டது. பாழாய்ப் போன உன் மாமன் மாயாண்டிமுதலி நான் கட்டிய கோட்டையைத் தகர்த் தெறிந்து விட்டான். கற்பகம் ஏமாந்துபோய் விட்டாள்”

‘ என்னப்பா சொல்லுகிறீர்கள் ?”

“கலிங்கநத்தத்தில் ஒரு மாப்பிள்ளை எம். ஏ. படித்தவர்; போலீசு இன்சுபெக்டர் வேலை பார்க்கிருராம். அவருக்கு நம் கற்பகத்தைக் கேட்டார்கள். வந்து பார்க்கலாமா என்றார்கள். ஆகட்டும் என்றேன். மாப்பிள்ளையும் பெற்றாேருமாக வந்து பார்த்தார்கள். நானும் பெண்ணுக்குத் தாராளமாகச் செய்வதாகச் சொன்னேன். பரியத்துக்கு நாள் குறித்து அனுப்புவ தாகச் சொல்லித் நிறைவுடன் சென்றார்கள். அவ்வளவு தான் ‘

‘ஏன், அப்புறம் என்ன ஆயிற்று ?”

“இதைக் கேள்விப்பட்ட அந்த மாயக்கார மாயாண்டி என் எண்ணத்தில் மண்ணேப் போட்டு விட்டான். தன் பெண்ணைக் கட்டிக்கொண்டால், தான் ஏராளமாகச் செய்வதாக ஒரு தரகன் மூலம் சொல்லி யனுப்பின்ை. அந்தப் போலீசு மாப்பிள்ளேயும் பெற்றாே ரும் அல்லியை வந்து பார்த்து விட்டுப் போர்ைகள். உன் அம்மா சற்று கருநிறமாதலால், நம் கற்பகம் மாநிறமா யிருக்கிருள். உன் அத்தை-அதாவது என் தங்கை நல்ல சிவப்பு ஆனதால், அவள் வயிற்றில் பிறந்த அல்லி சிவந்த மேனியோடு மினுக்கி யிருக்கிருள். மாப்பிள்ளைக்குக் கற்பகத்தைவிட அல்லியைப் பிடித்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலர்_மணம்.pdf/52&oldid=656294" இலிருந்து மீள்விக்கப்பட்டது