பக்கம்:மலர் மணம்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 மலர்

சொல்லியனுப்பி விடுவேன். பிறகு பழம் தானுகப் பழுத்துவிடும்.”

“ நான் ஒத்துக்கொள்வதென்ன ? நீங்கள் சொல்லா மலேயே, இயற்கையாகவே, பாதி சொத்தைக் கற்பகத் துக்குக் கொடுத்துவிடத்தான் இருக்கிறேன். பிள்ளை களுக்குள்ளே ஆண் என்றும் பெண் என்றும் வேறுபாடு உண்டா என்ன ? நாங்கள் இருவரும் சரிநிகராகப் பங் கிட்டுக் கொள்ளவே விரும்புகிறேன். இன்னும் கேட்டால், சொத்து முழுவதையுமே கற்பகத்துக்குக் கொடுத்துவிடவேண்டுமென்றாலும் எனக்கு இரட்டை மகிழ்ச்சி. நான் படித்தவன்; எப்படியாவது பிழைத்துக் கொள்வேன். என் தங்கை நலமுடன் வாழ்ந்தால் அதுவே எனக்குப் போதும்.”

“ சரி, குருசாமியைக் கூப்பிட்டுவரச் சொல்லு கிறேன்.” என்று சொல்லி அப்பா எ ழு ந் தார். அதற்குள் அம்மா சிற்றுண்டிக்கு அழைத்தார்கள். அந்த வேலையும் முடிந்தது.”

அப்பா குறிப்பிட்ட குருசாமியும் வந்து சேர்ந்தார். அவர் மூலமாகத்தான் முதல் முதல் கற்பகத்துக்குப் போலீசு மாப்பிள்ளை பாண்டியன ஏற்பாடு செய்தார்கள். * சதியாலோசனை தொடங்கிற்று.”

“ என்ன குருசாமி! நம் வீட்டு நல்ல காரியத்தில் குறுக்கிட்ட அந்த மாயாண்டியைச் சும்மா விடக்கூடாது. அவன் வீட்டுப் பரியத்தை நிறுத்திவிட வேண்டும்’

‘ அதற்கு என்ன செய்யவேண்டும், சொல்லுங்கள் ; கவனிக்கிறேன்."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலர்_மணம்.pdf/54&oldid=656296" இலிருந்து மீள்விக்கப்பட்டது