பக்கம்:மலர் மணம்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 மலர்

நல்லசிவம்பிள்ளையின் கெடு இன்றேடு முடிந்துவிடுகிறது. எனவே, இன்று பிற்பகல், வழக்கம்போல், ஊருணிப் பொங்கல் விழா அரங்கிலே, ஊரார் புது நாட்டாண்மைக் காரரைத் தேர்ந்தெடுக்க இருக்கிறார்கள். நம்மைச் சேர்ந்தவர்கள் என்ன அப்பதவிக்கு நிறுத்த இருக் கிறார்கள். எனக்கும் விருப்பந்தான். ஆல்ை, இதிலும் உன் மாமன் மாயாண்டி கடுமையாகப் போட்டியிடு கிருன். எப்படியாவது நாம் வெற்றி பெற்றக வேண்டும். வயது வந்த ஆண் பெண் எல்லோருக்கும் வாக்குரிமை உண்டு. மாயாண்டி தன்மகள் அல்லியை விட்டுப் பெண் களுக் கெல்லாம் சொல்லச் செய்திருக்கிருளும். நீயும் உன் நண்பர்களுக் கெல்லாம் சொல்லு. நம் ஆட்களும் முனைந்து வேலை பார்ப்பார்கள். நீ எல்லாவற்றையும் மேற்பார்வை பார்த்துக்கொள்”.

என்று அப்பா சொன்னதும், எனக்கு மனம் கெட்டு விட்டது. ஐயையோ, எப்படியிருந்த குடும்பங்கள் எப்படி ஆய்விட்டன. கொண்டானும் கொடுத்தானும் போர் முனையிலா சந்திப்பது ? இப்படிப் பகைத்துக் கொண்டு போட்டி போட்டு அழிந்த குடும்பங்கள் எத்தனையோ ஒருவரை யொருவர் கெடுப்பதில் இத்துணை ஊக்கங் காட்டும் மனித இனம், வாழவைப் பதில் ஊக்கம் காட்டினுல்......... ? என் கதை மட்டும் என்ன ? அவன் கிடக்கிருன் குடிகாரன், எனக்கு இரண்டு மொந்தை போடு என்பதுதானே ! அப்பா வுக்கு என்ன பதில் சொல்வதென்றே எனக்குப் புரிய வில்லை. -

“அப்பா! இந்த ஒரு காரியத்திலாவது மாமாவுக்கு

விட்டுக்கொடுத்து விடுவோமே. மேலும் மேலும் வம்பை வளர்த்துக் கொண்டே போவானேன் ?”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலர்_மணம்.pdf/56&oldid=656298" இலிருந்து மீள்விக்கப்பட்டது