பக்கம்:மலர் மணம்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனம் 55

வந்ததே அப்பாவுக்குக் கடுஞ்சினம் !

‘இந்த அறிவுரை புகட்டுவதற்காகவா உன்னிடம் சொன்னேன் ? அப்போதே நினைத்தேன், இந்த அரை டிக்கெட்டை நம்பி ஒரு காரியத்தில் இறங்கக்கூடா தென்று. ஏண்டா, மாயாண்டி மகள் ஏதாவது உன்னை மயக்கிவிட்டாளா? நீ வேண்டுமானுல் அவள் பக்கம் சேர்ந்து கொண்டு அந்த அயோக்கியனுக்கே பாடுபாடு. நான் கற்பகத்தை வைத்துக்கொண்டு காரியம் பார்க் கிறேன்.”

இது அப்பாவின் கோடையிடி முழக்கம். அவர் இருக்கும் நிலையில், என் சொல் யாதொன்றும் ஏருது என்று புரிந்து கொண்டேன். ஆமாம் பூசாரி யாகி விட்டேன். அவர் சொல்லுகிறபடி நடப்பதாக ஒத்துக் கொண்டேன். எ ன் ன செய்வது அ ல் லி க் கு எதிராக நான்-எனக்கு எதிராக அல்லி- தேர்தல் பிரசாரம்-இது வேரு !

இந்த நேரத்தில், ‘ஊருணிப் பொங்கல் விழா வுக்குப் புறப்படவில்லையா” - என்று கே ட் டு க் கொண்டே, அம்மா பின்கட்டிலிருந்து வந்தார்கள். அதற்கு அனைவரும் ஆயத்தம் செய்யத் தொடங்கிைேம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலர்_மணம்.pdf/57&oldid=656299" இலிருந்து மீள்விக்கப்பட்டது