பக்கம்:மலர் மணம்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 மலர்

‘ஏன் இப்படிக் கேட்கிறாய் ?”

‘இல்லை, ஒருவேளை வழியில் எங்கேயாவது தங்கி வ்ந்தாயா ?” -

‘ என்ன கேள்வி இது கற்பகம் ?’ ‘’ சும்மா சொல்லண்ணு’ - “ நான் ஏன் வழியில் தங்கவேண்டும்? இருட்டு நேரத்தில் எனக்கு எங்கேதான் என்ன வேலை ? ரயிலடி

யிலிருந்து நேரே வீட்டிற்குத்தான் வந்தேன். எதைக் கொண்டு நீ இப்படி யெல்லாம் பேசுகிறாய் ?”

“ அந்த பிளாஸ்டிக் நகை கொண்டுவந்தாயே, அதை வாங்கிவருவதற்காக எங்கேயாவது தங்கி வந்தாயா என்று கேட்டேன்”

“ஓ அதுவா ? அதை நான் பட்டனத்திலிருந் தல்லவா உனக்காக வாங்கி வந்தேன்’

“ஓ அப்படியா பட்டணத்துக் கடையிலே பெயர் போட்டே விற்குமோ ?”

“அது என்னவேர் எனக்குத் தெரியாது. ஏன் அதில் ஏதாவது பெயர் போட்டிருக்கிறதா?”

‘ஊம்-ஊம், போட்டிருக்கிறது. பெயரைப் பார்த் தால் ஒரு பெண்ணின் பெயராகத் தெரிகிறது. இன்னுங் கேட்டால், அந்தப் பெண்ணின் கையெழுத்தே அது.”

‘ என்ன கற்பகம் சொல்லுகிறாய் ? எனக்கு ஒன்றுமே புரியவில்லையே.” -

“ புரியாது-புரியாது. உண்மையைச் சொல்லிவிடு அண்ணு. நான் ஒருவரிடத்தும் சொல்லவில்லை.”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலர்_மணம்.pdf/64&oldid=656307" இலிருந்து மீள்விக்கப்பட்டது