பக்கம்:மலர் மணம்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மணம் 65.

திருந்தாரே, அந்த மாப்பிள்ளையை அப்போது உனக்குப் பிடித்ததா ?”

“ அதைக் கேட்காதே அண்ணு.”

“ஏன் ? என்னிடம் சொல்வதற்கென்ன ?”

“அந்த மாப்பிள்ளேயே என்னைப் பார்க்க வந்திருக் தார். என்ன நன்றாக ஒப்பனே (அலங்காரம்) செய்தனர். அவருக்குக் காஃபி, வெற்றிலே எல்லாம் கொண்டு போய்க் கொடுக்கச் சொன்னர்கள். அந்த நாடகமெல் லாம் எனக்குப் பிடிக்கவில்லை. நான் மறுத்தேன். வற்புறுத்தினர்கள். தேம்பினேன்-அழுதேன். உடனே இரண்டு மூன்று கிழவிகளாகச் சேர்ந்து கொண்டு. “ஏண்டி கற்பகம் ! நீ சின்னவளா யிருந்தபோது, யாரைக் கட்டிக்கொள்ளப் போகிறாய் என்று கேட்டால், ஒரு. போலீசு இன்சுபெக்டரைத்தான் கட்டிக்கொள்ளப் போகிறேன் என்று அடிக்கடி விளையாட்டாகச் சொல் வாயே, அது இப்போது பலித்து விட்டதடி வந்த வாய்ப்பை நழுவவிடாதே. எழுந்து வா. இப்படி வெட்கப் பட்டால் என்ன காரியம் நடக்கும் பெண்ணுய்ப் பிறந்த வர்கள் என்றைக்கிருந்தாலும் ஒருவனுக்கு ஆட்பட்டுத் தானே தீரவேண்டும் ? கூச்சப்படாதே. காஃபியைக் கொண்டுபோய் அ வரி ட ம் கொடு-என்றெல்லாம். சொல்லிக் கரையாய்க் கரைத்தார்கள். எனக்கோ அச்சம் ஒருபுறம்-காணம் மறுபுறம். அப்பா எதிரே எப்படி கான் எடுத்துக்கொண்டு பேரிவேன். எனக்கு எண்சாண் உடம்பும் ஒரு சாண் ட்டம்பாகக் குன்றிப் போய் விட்டது. இருந்தாலும் உள்ளத்திலே எனக்கு ஒருவகையில் நிறைவுதான்- ஊர்ப் போலீசு நிலையத் தில் இன்சுபெக்டர்களாக இருந்து வந்தவர்களுடைய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலர்_மணம்.pdf/67&oldid=656310" இலிருந்து மீள்விக்கப்பட்டது