பக்கம்:மலர் மணம்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மணம் 67.

“அது சரி கற்பகம் ! அதே போலீசு மாப்பிள்ளையை மீண்டும் முடித்து வைத்தால் மணந்து கொள்ள உடன் படுகிருயா ?”

இந்தக் கேள்விக்குப் பதிலே இல்லை. ஒருவகை நாணத்துடன் கற்பகம் தலை கட்டுக் கொண்டாள். புரிந்து கொண்டேன். -

“அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம்

கடுத்தது காட்டும் முகம் ”

என்பது வள்ளு வம் அல்லவா? இந்த நேரத்தில் அல்லி தன் தம்பி தங்கையுடன் எதிர்முகமாக வந்து கொண்டிருந்தாள். எங்களை நோக்கி வருமாறு நானும் கைக்குறிப்புக் காட்டினேன். அவளே இப்போது தனியே சந்தித்து, இனி ஆகவேண்டிய காரியங்களுக்கு ஏற்பாடு செய்ய விரும்புகிறேன் என்று கற்பகத்திடம் தெரிவித் தேன். இவளும் ஒத்துக்கொண்டாள்.

நாங்களும் அல்லியும் நெருங்கினதும், அவளும் கற்பகமும் ஒருவரை யொருவர் பார்த்துச் சிரித்துக் கொண்டனர்-பழைய பற்று போகுமா? உறவுக்கு உறவுசிறு பிள்ளையிலிருந்து விளையாட்டுத் தொடர்பு வேறு. கலமா கற்பகம் ?” என்று அல்லி முதலில் பேச்சு கொடுத்தாள். நான் கலந்தான் ; நீ நலமாய் இருக்கி ருயா அண்ணி ?” என்று கற்பகம் கேட்டாள். அண்ணி என்றழைத்ததும் அ ல் லி யி ன் முகத்தைப் பார்க்க வேண்டுமே ! இதற்கு முன்பெல்லாம் மச்சி (மைத்துணி) மச்சி என்றே அழைத்து வந்த கற்பகம் இப்போது அண்ணி என்று அழைத்தால் அல்லிக்கு எப்படி யிருக்கும் !

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலர்_மணம்.pdf/69&oldid=656312" இலிருந்து மீள்விக்கப்பட்டது