பக்கம்:மலர் மணம்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 மலர்

சொல்லிவிட்டேன். நடக்கவிருக்கும் பரியத்தைத் தடுத்து, அத்தானுக்கு என்னேக் கட்டிக் கொடுக்க அப்பாவிடம் ஏற்பாடு செய்ய வேண்டுமென்று அம்மா காலக் கட்டிக்கொண்டு கதறினேன்; கெஞ்சினேன். “ உன் அப்பா பிடித்தது உடும்புப் பிடியாயிற்றே; இது நடக்கிற காரியமா ? நான் என்ன செய்வேன்’ என்று சொல்லிக் கைவிரித்து விட்டார்கள். அப்படி யென்றால் தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டினேன். உண்மையிலேயே என் கடைசி முடிவும் அதுதான். இந்த அணுகுண்டைப் போட்டதும் அம்மா அயர்ந்து விட்டார்கள். முடிந்தவரையில் முயன்று பார்ப்பதாக முடிவு கொடுத்தார்கள். அதன் பிறகுதான் விழாவிற்குப் புறப்பட்டோம்”

கெட்டிக்காரிதான் அல்லி நீ அம்மாவிடம் போட்ட அந்த அணுகுண்டை நாளேக்குள் அப்பா விடமும் போடு. ஆவது ஆகட்டும். ஆனல் இன்னென்று சொன்னயே, கடைசி முடிவும் அதுதான் என்று, அதை’ மட்டும் செயலில் செய்து விடாதே, பேச்சோடு இருக்கட்டும்”

‘ சொல்வேறு, செயல்வேரு அத்தான் ?”

“ தற்கொலை செய்து கொள்வது கோழைத்தன மல்லவா ?” கையாலாகாத கயவர்களே-வாழத்தெரியாத மடையர்களே தற்கொலை செய்துகொள்வார்கள்’

S$ “தற்கொலே செய்துகொள்வது கோழைத்தனம் என்று நான் கருதவில்லை. வறுமையாலும் பிணியாலும் முப்பாலும் கடுமையாய் வருந்துவோர்கூட இறக்கத் துணிவதில்லை. இயற்கையாகச் சாவு நேரிட்டாலும், இவ்வுலகத்தைத் துறக்க ஒருப்படுவதில்லை. எனவே,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலர்_மணம்.pdf/74&oldid=656318" இலிருந்து மீள்விக்கப்பட்டது