பக்கம்:மலர் மணம்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 மலர்

உனக்கு உலகம் பத்தாவது படிப்பைத் தரவில்லை. வகை செய்து வாழ்க்கையை வளப்படுத்திக் கொள்வதற் காகவே அந்தப் படிப்பு தரப்பட்டிருக்கிறது. அதனல் அதைச் செய்ய முடியவில்லை என்றால், படிப்பே தேவை யில்லை; பழைய காட்டுமிராண்டி வாழ்க்கைக்கே திரும்பலாம்.”

‘நீங்கள் குறிப்பிடுகிறபடி என் வாழ்க்கையை வளப்படுத்திக் கொள்வதற்காகத்தான் இத்துணைப் பாடு படுகிறேன். அத்தான்.” -

“அது சரி, முயற்சி செய். உன் அப்பாவிடம் மன்றாடுபோராடு. முடியாது போனுல் விட்டுவிடு.”

“ இன்றிரவே அப்பாவிடம் என் கருத்தைச் சொல்லப் போகிறேன்.”

“ அப்படியே செய். நானும் என் தந்தையிடம் சொல்லப் போகிறேன். சூழ்நிலை ஒத்து வருகிருற்போல் தெரிகிறது. இதைச் சொல்லி உன்னத் தூண்டவே இங்கே காண விரும்பினேன். சரி, யாராவது பார்த்து விடப் போகிறர்கள்-பிரிந்து விடுவோம்.”

‘ அத்தான் ‘

“ அல்லி...... ஊம். இன்னென்று கேட்க மறந்தே போனேன்.” .

“ என்ன அது ?”

‘இன்றைக்கு நாட்டாண்மைக்காரர் தே ர் த ல். நடக்கப் போகிறதல்லவா ? உன் அப்பாவும் நிற்கப் போகிருராமே. அவருக்காக நீ உறைப்புடன் வேலை பார்க்கிருயாமே ?”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலர்_மணம்.pdf/76&oldid=656320" இலிருந்து மீள்விக்கப்பட்டது