பக்கம்:மலர் மணம்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மணம் 75

“உங்கள் அப்பாவுந்தான் நிற்கப் போகிருராம். நீங்களுந்தான் வேலை பார்க்கிறீர்களாம்.”

“ நான் வேலை பார்க்கிறேன் என்று தெரிந்துமா நீ எனக்கு எதிராக வேலை செய்கிறாய் ? என்னுல் நம்பவே முடியவில்லையே!”

‘நம் இருவரின் நட்பு தனி-ஒவ்வொருவரின் குடும்பவிவகாரமும் தனித்தனி அத்தான் !”

‘ எனக்காக நீ விட்டுக் கொடுக்கக் கூடாதா ?” ‘எனக்காக நீங்கள் விட்டுக் கொடுக்கக் கூடாதா ?”

“ அது எப்படி முடியும் ?” “ நான் மட்டும் எப்படி முடியும் ?”

“ நீயா இப்படிப் பேசுகிறாய்? உண்மையாகவா ?”

‘ ஆம், உங்கள் அல்லிதான் பேசுகிறேன். என் சொந்த உரிமையா யிருந்தால் விட்டுக் கொடுத்து விடு வேன். உரிமை என்ன ? என் உடல் பொருள் உயிர் அனைத்தும் உங்களுக்காகத்தான்; ஆல்ை, இது அப்பா வைப் பொறுத்ததாயிற்றே. அவருக்கு மகளாகப் பிறந்து அவரது உப்பை உண்டு வளர்ந்து வரும் நான் அவருக்கே கேடு நினைக்கலாமா ?” -

‘ எனக்காக இப்போது விட்டுக் கொடுக்க வில்லை யென்றால், இனி நான் உன்னே ஏறெடுத்துக்கூட பார்க்க மாட்டேன். என்ன சொல்லுகிறாய் ? முடிவாகச் சொல் ! உறுதியாகச் சொல் ஊம், ஆகட்டும் ‘

& 4 5 *

“ ஏன் மயங்குகிறாய்? சீக்கிரம்............”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலர்_மணம்.pdf/77&oldid=656321" இலிருந்து மீள்விக்கப்பட்டது