பக்கம்:மலர் மணம்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மலர்

7

6

‘நீ என்ன அத்தான்-அத்தான் என்று அழைப்பது நிலக்க வேண்டுமானுல் சீக்கிரம் சொல்..................... சொல்லமாட்டாயா ?”

‘சொல்லி விடுகிறேன். அத்தான், இப்போதே சொல்லி விடுகிறேன். இந்தக் காரியத்தில் மட்டும் நான் என் தந்தையை வஞ்சிப்பதற்கில்லை. மன்னிக்க வேண் டும். இது எங்கள் குடும்ப உரிமை. அவருக்கு வாக்குப் போடும்படி பலரையும் திருப்புகிற எனது பணியை நான் தொடர்ந்து செய்யத்தான் செய்வேன்.”

“ இதன் விளைவு என்ன ஆகும் தெரியுமா ?” ‘நீங்கள் விட்டவழி ஆகும்.” -

“அந்தப் போலீசு பூதம் பாண்டியனைத்தான் நீ மணக்க வேண்டிவரும்; என்னை மறந்துவிட வேண்டியது தான்.” . -

‘மணந்தால் உங்களை மணப்பேன் : இல்லையேல் கன்னியாகவே காலங் கழிப்பேன்; வேறு யாரையும் மணந்து கொள்ள மாட்டேன்.”

$ 9

“ அல்லி...............

33

“அத்தான்............

‘நீ என்னை மன்னிக்க வேண்டும். உன்னை நான் மிரட்டியது உண்மையன்று. உனது உள்ளத்தின் உறு தியைச் சோதிக்கவே இவ்வாறு நடித்தேன். தேர்தல் விவகாரத்தில் அப்பா பக்கம் உறுதியா யிருக்கிற உனது உள்ளம், திருமண விவகாரத்திலும் என் பக்கமே உறுதி யாக இருக்கும் என்பது இதன் பொருள். இது உள்ளத் தின் உயர்ந்த பண்பு. இத்தகு உள்ளங்க்ளே எந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலர்_மணம்.pdf/78&oldid=656322" இலிருந்து மீள்விக்கப்பட்டது