பக்கம்:மலர் மணம்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மணம் 79

கொடியவர்கள். வேறு எதைப் பற்றியும் கவலை கொள்ளாமல், தங்கள் வெற்றி ஒன்றிலேயே கண்ணு யிருப்பார்கள். இந்தச் சகதியில் நம் தந்தை ஏன் தடுக்கி விழுந்திருக்க வேண்டும்-என்றெல்லாம் எ ண் ணி நொந்து கொண்டேன்.

நொந்து கொண்டேனே தவிர, மீண்டும் எனது அரசியல் அறிவு வேலை செய்யத் தொடங்கியது. எல்லோருமே ஒதுங்கிப் போனுல் யார்தான் பொறுப்பு ஏற்பது? எல்லோருமே சொந்தக் காரியங்களை மட்டும் கவனித்துக் கொண்டிருந்தால், யார்தான் பொதுக் காரியம் பார்ப்பது ? பொதுக்காரியம் பார்ப்பவன் பொறுக்கித் தின்னுகிருன் என்கிறார்கள்-பொறுக்கித் தின்பதற்காகத்தான் பொதுக்காரியம் பார்க்க வருகி ருர்கள் என்கிறார்கள். இருக்கலாம் ; தேனை வழித்தவன் புறங்கையை நக்கத்தான் செய்வான். ஊர்வேலை பார்ப் பவன் கொஞ்சம் சாப்பிடுவான்கூடத்தான். ஆனல், தேன் முழுவதையும் தான் சாப்பிட்டு விட்டு, ஊரார்க்குப் புறங்கையைக் காட்டக் கூடாது. அப்படி செய்பவன் எவ்வளவு நாளேக்கு நிலைக்க முடியும்? உலகம் அவனுக்கு விடை கொடுத்துவிடும். அதற்குத்தான் தேர்தல் இருக்கிறதே.

இதை விட்டுவிட்டு, அரசியலில் ஈடுபடுபவர்கள் அத்தனே பேரையும் பழித்துக் கொண்டிருப்பதில் பயனில்லை. அது கையால்லாகாத்தனம்; பொறுப்பற்றவர் களுடைய வேலை. அயோக்கியர்களின் கடைசி புகலிடம் அரசியல்’ என்று ரோ சொன்னதாகச் சிலர் அடிக்கடி பேசக் %ேட்டிருக்கிறேன். இந்தக் கருத்தை முதலில் கேட்ட்போது எனக்கும் சுவையாகத்தான் இருந்தது. பிறகு சிந்திக்கச் சிந்திக்க இதனை ஏற்றுக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலர்_மணம்.pdf/81&oldid=656326" இலிருந்து மீள்விக்கப்பட்டது