பக்கம்:மலர் மணம்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனம் 81.

சிலர். அது முறையாகாது; இந்த இருவருள் ஒருவரே இருக்கவேண்டும் என்று பலர் சொன்னர்கள்.

இந்த நேரத்தில், ‘ இருவருள் மிகுந்த படிப்புடை யவரை எடுத்துக் கொள்ளலாம்” என்று ஒரு குரல் ஆ ண் க ள் ப க் க த் தி லி ரு ங் து எ ழு ங் த து. அதைத் தொடர்ந்து, ‘ இருவருள் மிகுந்த வயதுடைய வரை எடுத்துக் கொள்ளலாம்” என்று ஒரு குரல் பெண்கள் பக்கத்திலிருந்து வந்தது. முதல் குரல் என் னுடையதுதான். ஏனெனில், மாமாவைவிட அப்பா அதிகம் படித்தவர். அதல்ை அந்தத் துருப்பை வைத்து வெட்டலாம் என்று நான் முயன்றேன். இரண்டாவது வந்த குரலோ அல்லியினுடையது. ஏ. .ெ ன ரிை ல், அப்பாவைவிட மாமா அதிக வயதுடையவர்; அதனல், என் துருப்புக்குமேல் பெரிய துருப்பாக அதை அடித்து வெல்லலாம் என்று அல்லி முயன்றிருக்கிருள்.

தலைவரோ, இந்த அறிவுரைகளை யெல்லாம் ஏற்றுக் கொள்ளவில்லை. இருவருக்கும் பொதுவாகத் திருவுளச் சீட்டு போட்டு எடுக்கலாம் என்று செய்வழி கூறினர். ஆமாம், ஆமாம், அதுதான் சரி என்று அனைவரும் பெருமாள் மாடு மாதிரி தலையாட்டினர்கள்.

அம்பலவாண முதலயார், மாயாண்டி முதலியார் என்ற இரண்டு பெயர்களையும் தனித்தனியாக இரண்டு ஒலே நறுக்குகளில் வரைந்து ஒரு குடத்தில் இட்டு, ஒரு குழந்தையை விட்டு ஒர் ஒலையை எடுக்கச் செய்தார்கள். ஆமாம், அப்பாதான் வெற்றிபெற்று விட்டார். திரு. மணப் பெண்ணேப்போல மாமர் முகத்தைத் தொங்கப் போட்டுக் கொண்டார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலர்_மணம்.pdf/83&oldid=656328" இலிருந்து மீள்விக்கப்பட்டது