பக்கம்:மலர் மணம்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனம் 85

என்றும், ப்ரியத்தை நிறுத்தி விடலாம் என்றும் மாயாண் டிக்குத் தெரிவித்துவிட்டு வரும்படி அனுப்பி வைத்தார். நானும் வெற்றிக் களிப்புடன் விடைபெற்றுக்கொண் டேன்.’ -

என்று குருசாமி கூறி, அப்பாவின் புகழ் மாலையைச் சூட்டிக் கொண்டு புறப்பட்டு விட்டார்.

அப்பாவின் களிப்புக்கோ எல்லையில்லை. வெற்றி மேல் வெற்றி. அயர்ந்து தூங்கினர்.

எனக்கு ஏது தூக்கம் ? பணம் பிடுங்கிப் பிணமாகிய முத்தைய முதலியை நான் மிகவும் மட்டமாக மதித் தேன். இப்பொழுதுமட்டும் அவரை எப்படி நம்ப முடியும்? இன்னும் அதிகமாகத் தருவதாகச் சொன்னல் மாமா பக்கம் திரும்பி விடலாம். ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிபாடு கொண்டாட்டமாம். இப்போது முத்தைய முதலிக்கு நல்ல திசை போலும்! இப்படி அப்பாவைப் போலவும் மாமாவைப் போலவும் ஒவ்வொரு காரியத் திலும் போட்டி போட்டுக்கொண்டு கொட்டியழுது கெட்டுப்போன குடும்பங்கள் எத்தனையோ! இரண்டு ஆடுகளை முட்டவிட்டு, நடுவில் இரத்தம் குடிக்கும் கரி இந்த முத்தைய முதலி. பணம் என்றதும் இந்தப் பிணம் இப்படியா வாயைப் பிளக்கவேண்டும் !

முத்தைய முதலியை நோவானேன்? எல்லாம் தெரிந்த திருவள்ளுவரே ஓரிடத்தில் ஏமாந்துவிட்டிருக் கிருரே-தோல்வி யடைந்துள்ளாரே! அன்சேட்செல்வம்அருளே செல்வம்-அறிவேசெல்வம்-ஊக்க,ே செல்வம் =பணிவே செல்வம்-கல்வியே செல்வம்-கேள்வியே செல்ஸ்-இவையே அழியாத செல்வங்கள்-பணங்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலர்_மணம்.pdf/87&oldid=656332" இலிருந்து மீள்விக்கப்பட்டது