பக்கம்:மலர் மணம்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86

காசோ விரைவில் அழிந் தொழிந்து விடும்; அது கயவர் களிடமும் இருக்கும்-என்றெல்லாம் பல விடங்களில் கூறி, பணத்தைச் செருப்புக்காலின் கீழ்ப் போட்டுத் தேய்த்து மிதித்துத் துவைத்து, சுட்டுப் பொசுக்கி, சாம் பலைப் பத்தடிப் பள்ளத்தின் கீழ்ப் போட்டுப் புதைத்து விட்ட திருவள்ளுவரே, மீண்டும் எப்படியோ உயிர் பெற்றெழுந்து வந்து தம் கழுத்தைப் பிடித்து நெருக்கிய அந்தப் பணத்தைப் புகழத் தொடங்கிவிட்டாரே ! “ ஒன்றுக்கும் உதவாதவர்களே யெல்லாம் உயர்ந்தவர் களாக ஆக்கும் பணத்தைவிட மேலான பொருள் உலகில் வேருென்றும் இல்லே, பணம் இல்லாதவருக்கு இந்த உலக வாழ்வே இல்லை” என்றெல்லாம் பன்னிப் பன்னிப் பாடிவைத்துள்ளாரே வள்ளுவர். இப்படி ஏதேதோ எண்ணியபடியே நானும் தூங்கிவிட்டிருக் கிறேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலர்_மணம்.pdf/88&oldid=656333" இலிருந்து மீள்விக்கப்பட்டது