பக்கம்:மலர் மணம்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 மலர்

‘சரி இது வேண்டாம். விட்டுவிடுங்கள். ஆலப் பட்டி என்னும் ஊரில் ஒரு பெரிய செல்வர்; ஏராளமான நிலபுலங்கள் உடையவர். அவருக்கு ஒரே ஒரு பெண் தான்; இரண்டு ஆண்கள்: அவரும் உங்கள் மகனுக்குத் தம் பெண்ணைக் கொடுக்க விரும்புகிறார் சீர் செலுத்தி நிறையச் செய்வார்.” -

‘ எங்களுக்குச் செல்வர்களும் வேண்டாம் ; சீர் செலுத்தியும் செய்யவேண்டாம். இப்பொழுது அப்படித் தான் சொல்வார்கள். பெண்ணின் தகப்பனுர் வீட்டு வைக்கோல் போரை அண்ணுந்து பார்த்தால், தலைப் பாகை கழன்று விழுந்து விடுவது மட்டுமல்ல, தலையே ஒடிந்து வி ழு க் து விடும்-அவ்வளவு உயரம் என் பார்கள். அங்கே போய்ப் பார்த்தாலோ, ஒரு காணி கூட சொந்த நிலம் இருக்காது; ஊரார் நிலத்தைக் குத் தகைக்குப் பயிரிடுபவனுக இருப்பான் அவன். அது போகட்டும். என் மகனுக்கு என்னய்யா ஒருவன் செய்வது? நானேதான் என் சொத்தில் பாதியை இன் குெருவனுக்கு எழுதிவைக்கப் போகிறேனே. என் மகன் போனல், ஐயோ மருமகப்பயல் வந்துவிட்டானே என்று மலைக்காமல், உள்ளங் குளிர்ந்து ஒருவேளை சோறு போட்டு அனுப்பினுல் அதுவே போதுமையா.”

அதைப்பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம். நீங்கள் சொன்னல் இந்த இடத்தையே முடித்து விடு கிறேன்.”

‘நல்ல குடும்பந்தானே ? நல்ல பண்பாடு உடைய வர்கள் தானே ? குலம் கோத்திரம் எப்படி ?”

அந்தக் கவலேயே உங்களுக்கு வேண்டாம். நீங்கள் யாரை வேண்டுமானலும் விசாரித்துப் பார்த்துக் கொள்ளலாம்.”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலர்_மணம்.pdf/92&oldid=656338" இலிருந்து மீள்விக்கப்பட்டது