பக்கம்:மலர் மணம்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மணம் 91

“அதுதானய்யா நமக்குத் .ே த ைவ. ஆல்ை, பெண்ணு கம் அழகனுக்குப் பொருத்தமாயிருக்க வேண்டுமே. ”

“ அதற்கென்ன ! போய் ப் பார்த்துவிட்டால் போகிறது. தம்பியையும் அழைத்துக் கொண்டு. போவோம். எதற்கும் தம்பியையும் கேட்டு விடு வோமே. ‘

என்று இருவரும் பேசியபடியே என்னைப் பார்த் தார்கள். நான் ஒன்றும் பேசாது விழித்துக்கொண் டிருந்தேன். அவனேயே கேட்டுப் பாரு’ என்று அப்பா சொன்னர். ‘ஏன் தம்பி போய்ப் பார்த்துவிட்டு வரு வோமா ? உன் கருத்து என்ன ? என்று குருசாமி என்னைக் கேட்டார். ‘ எனக்கு இப்போது திருமணம் வேண்டாம்; நான்தான் படித்துக் கொண்டிருக்கிறேனே. கற்பகத்துக்குச் செய்துவைத்தால் அதுவே போதும்’ என்றேன். நான். அது எனக்குத் தெரியாதா ? ஏதோ காலம் கைகூடி வருகிறதே கையோடு கையாக உனக்கும் திருமணம்செய்து வைத்துவிடுவோம் என்று பார்த்தால், நீ என்னவோ கிராக்கி பண்ணுகிருயே’ என்று அப்பா கடிந்து கொண்டார். ஆமாம் தம்பி! அப்பா சொல்வதைத் தட்டாமல் ஒத்துக்கொள்’ என்று ஒத்துக்கு மத்தளம் அடித்துக் குருசாமி பக்கவாத்தியம் வாசித்தார். ‘எனக்கு இப்போது திருமணம் வேண்டவே வேண்டாம் ; நீங்கள் ஒன்றும் போய்ப் பெண் பார்க்க வேண்டியதில்லை’ என்று ஒரேயடியாக மறுத்தேன் நான். “நாங்கள் பார்க்கவேண்டாமென்றால், நீயாகவே பார்த்துக் கொள்வதாகச் சொல்லுகிருயாடா என்று அப்பா வசை மாரி பொழியத் தொடங்கினர். நாங்கள் குறிப்பிடும் இடம் உனக்குப் பிடிக்கவில்லையா ? வேறு பெண்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலர்_மணம்.pdf/93&oldid=656339" இலிருந்து மீள்விக்கப்பட்டது