பக்கம்:மலர் மணம்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 மலர்

$ 3

‘ வந்துப்பா வந்து.........

‘ வந்து என்ன வந்து ?”

‘அல்லி எனக்குக் கடிதம் எழுதினுள். அதனுல்தான் நான் சென்னையிலிருந்து வந்தேன். அன்றிரவே அவளே வீட்டில் சந்தித்தேன். நேற்று விழாவிலும் சந்தித்தேன். ஒருவரை யொருவர் மணந்து கொள்வதாக நாங்கள் முடிவுசெய்து கொண்டோம். அவள் தன் அப்பாவிடம் உடன்பாடு பெற முயல்வதாக ஒத்துக் கொண்டாள். நடக்கவிருந்த பரியத்தையும் நீங்கள் தடுத்து விட்டீர்கள். எங்கள் நல்லகாலந்தான் இது. நீங்களும் ஒத்துக் கொண்டால்.........”. .

‘ஒகோ, காரியம் அவ்வளவுக்கு மிஞ்சி விட்டதா ? என்னே யறியாமல், என்னேக் கேட்காமல், நீ எப்படி அவளே மணப்பதாக அவளிடம் ஒத்துக்கொண்டிருக்க லாம்? அவள் எழுதினுலும் நீ வரலாமா? உனக்கு எங்கே போயிற்று அறிவு. இதை நான் ஒத்துக் கொள்ளவே முடியாது. கரடியர்ய்க் கத்திலுைம் உன் மாமாவும் உடன்பட மாட்டான். அப்படியே அவன் ஒத்துக் கொண்டாலும் நான் உடன்படவே மாட்டேன். ‘ .

‘ அது என்னவோ, நான் அல்லியைத் தவிர வேறு யாரையும் மணந்துகொள்ள மாட்டேன்.”

அவள்மேல் ன்ன்ன அப்படிக் காய்த்துத் தொங்கு கிறது? அதுவுமல்லாமல், அவள் அப்பா நம்மைவிட பணக்காரன். நம் அளவைவிட பெரிய இடத்தில் பெண் கட்டிக் கொண்டால், பிறகு பெண்பின்னலேயே மனே எடுத்துக்கொண்டு திரியவேண்டியதுதான். உன் மாமன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலர்_மணம்.pdf/96&oldid=656342" இலிருந்து மீள்விக்கப்பட்டது