பக்கம்:மலர் மணம்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மணம் 95

ஒரு குரங்கன்-முரடன். அவன் இப்பொழுது ஒத்துகி

கொண்டு பெண் கொடுத்து விட்டாலும், பிறகு வாழ்க்கை முழுவதும் சண்டித்தனம் செய்துகொண்டே யிருப்பான் :

உன் வாழ்க்கை திராத போரும் பிணக்குமாகத் தான்

இருக்கும். ஆகவே, என் உயிர் இருக்கும்வரை உன்

எண்ணம் கடக்கவே நடக்காது. இது உறுதி.”

“ நான் கொடுத்து வைத்தது அவ்வளவு தான அப்பா ?”

‘நீ கொடுத்து வைத்ததா? நான் கொடுத்து வைத் தது இவ்வளவுதான். என் சொல் கேட்காத பிள்ளையைப் பெற்று வளர்த்தேனே. இன்னும் எனக்கு ஒரு சாண் கயிறுதான் பாக்கி.”

‘வேண்டாமப்பா வேண்டாம். இனி ஒரு முறை அப்படிச் சொல்லாதீர்கள். நான் என்றைக்குமே உங்கள் சொல்லே மீற மாட்டேன். நான் அல்லியிடம் எதுவும் உறுதியாக வாக்குக் கொடுத்துவிட வில்லை. முயன்று பார்க்கிறேன்-அப்பா ஒத்துக்கொண்டால்தான் உன்னே நான் மணந்து கொள்வேன் ; இல்லாவிட்டால், அவர்கள் குறிப்பிடும் பெண்ணேயே தான் மணந்து கொள்வேன்’ என்றுதான் அல்லிக்குச் சொல்லி வைத்திருக்கிறேன். எனவே, நீங்கள் எந்தப் பெண்ணைக் குறிப்பிடுகிறீர் களோ அந்தப் பெண்ணேயே மணந்துகொள்ள நான் காத்திருக்கிறேன்-கடமைப்பட்டிருக்கிறேன்.”

“அழகா! நீ சொல்வது உண்மைதான ? உன் சொந்த நினைப்பில்தான் பேசுகிருயா ?”

ஏன் வியக்கிறீர்கள்? உண்மைதானப்பா ! என்ன நம்புங்கள்! ஏன் என்னவோ எண்ணுகிறீர்கள் ?”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலர்_மணம்.pdf/97&oldid=656343" இலிருந்து மீள்விக்கப்பட்டது