பக்கம்:மலர் மணம்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96

“ தம்பீ ! உன் பண்பு-உன் பணிவு-உன் கடமை. யுணர்ச்சி எல்லாம் என்னைக் கவர்ந்து விட்டன. உனக்கு நான் என்ன பதில் சொல்வதென்றே இப்போது புரிய வில்லையே.” . . . . . . -

“எது வேண்டுமானலும் சொல்லுங்களப்பா, அதன் படியே நான் நடக்கிறேன்.” -

‘இவ்வளவு கடமை யுணர்ச்சி உள்ள ஒரு மகனது மனத்தைக் கெடுத்துப் புண்படுத்த எந்தத் தந்தையும் விரும்பமாட்டான். நான் இப்போது தலைகீழாக மாறி விட்டேன். உன் மாமா உடன்படுவதாயிருந்தால், நீ அல்லியையே மணந்து கொள்ளலாம். நான் மனமார ஒத்துக்கொள்கிறேன்.” -

“ அப்பா......... அப்பா......... !”

சரி, போய் அம்மாவிடமும் சொல்லிக் கொள்ளு. அடுத்து ஆகவேண்டியதைக் கவனி.”

என்று அப்பா சொன்னதும், எனது மகிழ்ச்சிக்கு எல்லேயே யில்லே. ஆனல் மாமாவை ஒத்துக்கொள்ளச் செய்ய வேண்டுமே. இப்போது எனக்குக் கால்பங்கு தான் காரியம் கைகூடி யிருக்கிறது; இன்னும் முக்கால் பங்கு கைகூடியாக வேண்டும். அதாவது, அப்பாவிடம் காரியம் முடிப்பது மிக எளிது; மாமாவிடமோ மிக அரிது. எதுவும் முயன்றால் முடியும் என்ற நம்பிக்கையுடன், நடந்ததையெல்லாம் அன்னையிடம் அறிவிக்கச் சென் றேன். .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலர்_மணம்.pdf/98&oldid=656344" இலிருந்து மீள்விக்கப்பட்டது