பக்கம்:மலேயாச் சொற்பொழிவுகள்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஓர் அத்தியாயம் கோலாலம்பூர் 28 - 6 - 48

  • மலேயா தமிழ்ப் பண்ணேயின் சார்பாகச் சென்னையி லிருந்து வந்த பச்சையப்பன் கல்லூரித் தமிழ்ச் சொற்பொழி வாளர் திரு. அ. மு. பரமசிவானந்தம் நேற்று கேரிக் பென்ட் " ஏறி விட்டதாகத் தகவல் கிடைத்தது. மலேயாவில் சரியாக ஒருமாதம். சென்னேயிலிருந்து வர ஒருவாரம். திரும்ப ஒரு வாம். மொத்தம் கப்பல், கார், ரயில் பிரயாணம் ஆறு வாரம். சிங்கப்பூரிலிருந்து பினங்குவரை சென்று சிங்கப்பூர் திரும்பினர். உள்காட்டுப் பிரயாணத்தின் பெரும்பாகம் தனிக்காரில் பார்த்த ஊர் பல. சொற்பொழிவு செய்த ஊர் இருபது இருக்கலாம். மொத்திம் சொற்பொழிவுகள் இருபத் தைந்துக்கு மேல் கேட்டோர் பற்பலர். இந்த நாட்டில் தமிழில் ஓர் ஆர்வம் உண்டாயிற்று. தமிழ் பரவியது. தமிழ்க் கலே'யும் பரவியது. வருக என எழுதியதும், வருகிறேன் என்று உடனே பதில் எழுதியதும், என்னேத்தவிரத் தெரிந்த வர் ஒருவரும் இல்லாத வேற்று காட்டிற்குக் கப்பல் எறிவர இசைந்ததும், அவசரத்தால் ஏற்பட்ட பல சங்கடங்களுக்கு இடையே புறப்பட்டதும், தனக்கு வரும் சிரமத்தைச்சிறிதும் பாராது பிறருக்குச் சிரமம் கொடுக்க கினேயாது பயனென்று கருதாது ஆர்வம் குறையாது பணியாற்றியதும் மிகப் போற்றம் சூரியன. அ. மு. ப. வரவழைக்கத் தகுந்தவர் ' என்று யான் சொல்லியதைச் சரியென அவர் அறிவாலும், குணத்தாலும், பணியாலும் மெய்ப்பித்தார். -

举 豪 漆 裘 兴 மலேயா தமிழ் வளர்ச்சியில் அ. மு. ப. வந்து போனது ஒர் அத்தியாயம். இவ்வாறு இன்னும் பல அத்தியாயங்கள் எழுதப்பட வேண்டும். மேலேயா சுற்றுப் பயணம்பற்றிக் கோலாலம்பூர் திரு. கா. இராமநாதன் செட்டியார் அவர்கள் கருத்து. அவர் தம் நாட்குறிப்பிலிருந்து எடுத்தது.