பக்கம்:மலையருவி கவிதைகள்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



12


கொள்ள ஏதுமற்ற பரபரப்பில் அந்நியமாதலுக்கு இலக்காகும் கவிஞன் தனக்கு நியாயம் கற்பிக்கும் வழிகளைத் தேடுகிறான். ஆத்ம பிணியால் பீடித்த நோயாளி, நோயின் தீவிரம் முற்றிய நிலையில், மருத்துவனாகி,

"யாழ் நகருக்குப் பயந்து ஒதுங்கி
இருட்டுக்காட்டில் வாழ்வைத்தொடங்கு”


என்று பரித்துரையும் செய்கிறான்.


"தமிழ் இலக்கியத்தில் என்றோ எதிரொலித்த சித்தர் பாடல்களின் தொனியும், நாட்டுப்பாடல் உத்திகளும் இவரது கவிதைகளில் இடம் பெற்றுள்ளன . அதேபோல இக்கால முற்போக்குக் கவிதைகளில் காணப்படும் உருவகச்சொற்- சேர்க்கைகளும்,அதன் தொடர் விளைவான கவிதை அமைப்பும் இடம் பெற்றுள்ளன... புதுக்கவிதையின் முக்கியப் பண்பாகிய தர்க்கமும் இவரது கவிதையில் இடம் பெறுகிறது.”


இப்படி கவிஞர் அக்னிபுத்திரன் கவிஞர் மலையருவியின் கவிதைகள் பற்றிக் கூறுகிறார்.


கவிஞர் மலையருவி வாழ்க்கை பற்றியும் நம்பிக்கைக் குறித்தும் பல கவிதைகள் எழுதியிருக்கிறார்.


வாழ்க்கையைப் பயணம் என்றும், முடிவில்லாப் பயணம், நெடும் பயணம், இருட்டு வழிப் பயணம் என்றும், ஆரம்பமும் முடிவும் தெரிய முடியாத அர்த்தமற்ற பயணம் என்றும் உருவகித்து தத்துவதரிசிகளும் சிந்தனையாளர்களும் நிறையவே எழுதியிருக்கிறார்கள்.