பக்கம்:மலையருவி கவிதைகள்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

14

இதை மலையருவியின் கவிதை ஒன்று அழகாக விவரிக்கிறது -

பொய்ம்மைக் கிழங்கள்
புன்னகை புரிந்தன
எல்லாம் தமக்குள் அடக்கம் என்பதாய்.

பொய்ம்மை முதுமைகள்
வெற்றியில் சிலிர்த்தன
காலம் காலமாய்க் கவிந்தோம் என்பதாய்.

எத்தனை எத்தனைக்
கீறல்கள் விழுந்து
எலும்புந் தோலுமாய்
எதிர்பார்ப்புகளால் எரிந்த போதும்

பொய்ம்மைக் கிழங்கள்
புன்னகை புரிந்தன
எல்லாம் தமக்குள் அடக்கம் என்பதாய்.

வாழ்ந்ததாய் நினைத்து
வாழ்வைக் கழித்து
வாழ்க்கை இழக்கும்
வயோதிகப் பொய்ம்மைகள்
சிரித்தால் என்ன?
சிலிர்த்தால் என்ன?

என்று கவிஞர் கேட்கிறார்.

வாழ்க்கை இந்தக் கவிஞருக்கும் ஒரு சோக நாடகமாகத் தான் தென்படுகிறது.