பக்கம்:மலையருவி கவிதைகள்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
17



அமைதிப் பூவை கசுக்கும்
இரைச்சல்...

சுற்றிச் சூழப்
பத்துத் திசையிலும்
பாரமாய் இறங்கச்
செவிச்சிறகுகள் முறிந்து பதைக்க
தூக்கிய காலைத்
திரும்பவும் புதை,
ஓசைக் கூண்டில்
போதும்... போதும்...

சந்தடி, இரைச்சல், கூச்சல், குழப்பம்
கம்பிகளுக்குள்ளே
காலம் போதும்...

எனக்குள் நாதம்
எங்கும் அமைதி
அமைதி வானில்
அடடா இன்பம்

(எனக்குள் நாதம்)

தன்னுள் ஆழ்ந்து,தன்னுள்ளேயே தனிப் பெரும் இன்பத்தைத் தேடும் ஆத்மீக ஞானம் பெறுவதற்கு, இருட்டில் தனித்திருக்கும்படி உபதேசிக்கும் முறையை எதிரொலிக்கிறது ஒரு கவிதை.

கண்களை மூடு
விழிகளைப் புதை