பக்கம்:மலையருவி கவிதைகள்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
'22

'நெஞ்சில் அடர்ந்த
புதர்களிலிருந்து
பூநாகம் புறப்படுகின்றது’

'வெளிச்சங்களை மென்று விட்டு
இருள்நீரில் சறுக்கி விழுந்த
உலகு'
'எண்ணச் சிலந்திகள் எழுப்பிய
கோட்டைகள்'

இப்படி இன்னும் எத்தனையோ! இவை கவிஞரின் கற்பனைத்திறத்துக்கு உதாரணங்களாகின்றன.

கவிஞர் மலையருவி யதார்த்தி ரீதியிலும் அழகிய கவிதைகள் எழுதவல்லவர் என்பதை எடுத்துக் காட்டும் படைப்புகளும் இத்தொகுப்பில் உள்ளன.'மனிதத் தின்னிகள்' 'கல்லறைத் தவங்கள்'போன்றவற்றைக் கூறலாம்.

'மனிதத் தின்னிகள்' என்ற கவிதை சுடுகாட்டின் எதார்த்த நிலையைச் சித்தரிக்கிறது.வாழ்க்கைக் களத்தில் மட்டும்தான் மனிதர்களைச் சுரண்டும், அரிக்கும் பிறவிகள் உண்டு என்பதில்லை. சாவின் களமான சுடுகாட்டிலே கூட-இவை பார்வையில் படுகின்றன.

நாசித்துளையருகே
நாலைந்து ஈக்கள்
உடைந்த குடத்தின்
ஓட்டுச் சில்லில்
மொய்க்கும் எறும்புகள்