பக்கம்:மலையருவி கவிதைகள்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
24



சூரியச் சிவப்பின் விடியலுக்குள்
கருங்காடுகளின் கல்லறை

ஒரு தீக்குச்சியின் தலைக்குள் எத்தனைக் கடமைகள்
உரசப் போகும் பொழுதுக்காக

கருத்து நிறைந்த கவிதை.

ஒரு சில வரிகளில் ஆழ்ந்த கருத்தை அமைத்துத் தந்திருக்கிறார் மலையருவி 'மயக்கம்' என்ற கவிதையில்

பொய்முடி புனைந்தாள்
கூந்தல் நீண்டு
மலர்சூடி மணந்தது.
எதில் வெற்றி?

பொய்யின் இருப்பிலா?
இருப்பின் மறைப்பிலா?

தத்துவச் சிந்தனைக்குக் களம் அமைக்கிறது. இந்தக் கவிதை

இதே போல, தர்க்க ரீதியில் கேள்விகள் எழுப்பி, விடை கூறி, மீண்டும் தர்க்கமாக வினா எழுப்பிக்கவிதைவளர்க்கும் திறமையும் மலையருவியிடம் இருக்கிறது. 'வேடங்களின் பின்னே வெற்றுமுகம்' என்ற கவிதை இதற்கு நல்ல சான்று ஆகும்.