பக்கம்:மலையருவி கவிதைகள்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
29

பாதையிலேயே கவிதைப் பயணம் மேற்கொண் டிருக்கிறார்.

அம் முயற்சியில் அவர் பூரண வெற்றி அடையவில்லை என்று அவரே சுயவிமர்சனம் செய்து கொள்கிறார்.

அதைத் தேடி,
இதைத்தேடி,
தேடித் தேடித் தேய்த்தேன்.

சொற்களை நிறுத்திச்
சுமைகளை ஏற்றினேன்.

நகர மறுத்தன.

உத்திகளாலே குத்தித் தள்ளி
அணிகளாலே நையப் புடைத்து
மெல்ல நகர்த்தினேன்.

சொற்கள் செத்தன.

மீண்டும் மீண்டும்
கவிதை தேய்ந்தது.

கடைசி முயற்சியாய்
எனக்குள் பயணம்
என்னை அடைய

எங்கே கவிதை?

இப்படி, உண்மையை, உயர்வை, அழகை அனுபவ ஞானத்தைத் தேடும் கவிஞரின் முயற்சி தொடர்கிறது. தான் செய்து முடித்ததில் திருப்தி இன்மையும், மேலும் உயர்வாய் உன்னதமாய் சாதனை புரிய வேண்டும் என்ற தவிப்பும், அதற்கான முயற்சியை மேற்கொள்வதும்,