பக்கம்:மலையருவி கவிதைகள்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
7

பாரதியார் துணிந்து நடைமுறைப் படுத்திய வடிவங்களில்,சோதனை ரீதியாக அவர் கையாண்ட புது முயற்சி 'காட்சிகள்' என்ற தலைப்பில் அமைந்த வசன கவிதை ஆகும்.

அதைத் துவக்கமாகக் கொண்டுதான், பிற்காலத்தில் ந.பிச்சமூர்த்தியும்,கு.ப.ராஜ கோபாலனும் தங்கள் கவிதைப் படைப்புகளைஉருவாக்கினார்கள்.

தற்காலத்தில் நிலவுகிற கவிதைப் போக்கில் இரண்டாவதான புதுக்கவிதையிலும் இரண்டு பிரிவுகள் தூக்கலாகத் தெரிகின்றன.ஒன்று,தனி மனிதனின் அகநோக்கை முக்கியப்படுத்துவது. மற்றது, விரிந்து பரந்த சமுதாய நோக்கு கொண்டது.

கவிதையில் மட்டும் இல்லை; இலக்கியத்தின்சகலபிரிவுகளிலும் இவை காணப்படுகின்றன.

தமிழ் இலக்கியத்தில் மட்டுமில்லை, உலகத்தின் அனைத்து மொழிகளிலும் தனிமனித நோக்கும், சமுதாயப் பார்வையும் ஆட்சி செலுத்தி, இரண்டு பெரிய அணிகளாகவே செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன.

தனிமனித நோக்குடன் உருவாக்கப்படுகிற இலக்கியப் படைப்புகள் தனிநபர்களின் மன உளைச்சல்கள், ஏக்கங்கள், ஆசைகள், கனவுகள். நம்பிக்கைகள்,நம்பிக்கைவரட்சி, உணர்ச்சிகள்,உள்ளத்தின் தேடல்கள். மற்றும் தத்துவ விஷயங்கள் முதலியவற்றையே பிரதி பலிக்கும் இந்தப் போக்கு சமூகப் பிரச்சனைகளை, நாட்டின்