பக்கம்:மலைவாழ் மக்கள் பாண்பு.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை இந்திய அரசாங்கத்தார் உரிமை நாட்டில் பல்வேறு ஆக்கப் பணிகளைச் செய்கின்றனர். அவற்றிற்கெனத் தனித்தனியே பல நிறுவனங்களே அமைத்துள்ளனர். அவற்றுள் ஒன்று பல்கலைக்கழக மானியக் குழு. இம் மானியக் குழு, பல்கலைக் கழகங்களுக்கும் பிற கல்லூரி களுக்கும் அவற்றுள் பணியாற்றும் ஆசிரியர்களுக்கும் மானி யங்களே அளிக்கின்றது. அவற்றின் வழியே நல்ல பல ஆய்வு களும் நடைபெறுகின்றன. அவற்றுள் ஒன்றே விடுமுறை நாட்களில் ஆசிரியர்களையும் ஆராய்ச்சி மாணவர்களையும் வெளியிடங்களுக்கு அனுப்பி, பலதுறை ஆராய்ச்சிகளே நடத்துவது. அந்த அடிப்படையிலே (Travel grant) இன்று இந்த நூல் உருவாகின்றது. உஸ்மானியப் பல்கலைக் கழகம் ஆந்திர மாநிலத்தில் சிறந்த பணியாற்றுகின்றது; சென்ற ஆண்டு தன் தமிழ்த் துறையின் தலைவகை என்னைப் பரிந்து ஏற்றது. இப் பல்கலைக் கழகத் துணைவேந்தர் அவர்களும் பிற அன்பர் களும் கடந்த ஆண்டில் என்பால் அன்புளங்கொண்டு என்னுல் இயன்ற அளவு ஆக்கப் பணி செய்ய உதவினர். இப்பல்கலைக் கழகத்தே பணியாற்றுகின்ற, மானியக் குழுத் தொடர்பாளரும் எனது விண்ணப்பங்களே ஆராய்ந்து ஆவன கண்டனர். துணைவேந்தர் அவர்கள் மானியக்குழு ஒதுக்கிய தொகையில் எனக்கும் ஓரளவு பகிர்ந்தளித்து, கொங்குநாடு சென்று அங்கு வாழும் பழங்குடி மக்களின் பண்பையும் வாழ்வையும் ஆராய வாய்ப்பளித்தனர். அவர் தம் ஆணே வழியே செய்த தொண்டின் முடிவு இந்நூலாக வெளிவருகின்றது. ! . . . . . . . . . . . . . .