பக்கம்:மழலை அமுதம்.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பதிப்புரை

1935 - ம் ஆண்டு நான் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ண வித்தியாலய மாணவன். தினம் இரவு உணவுக்குப் பின் வரும் நேரத்தை ஆவலுடன் சகமாணவர்களுடன் எதிர்பார்த் திருப்போம்.

பிரஞ்சு நாவலாசிரியர் விக்தர் ஹீயூ கோவின், லா, மிசாரபிள் கதையை சின்னச் சின்ன வாக்கியங்களில் மிக அழகாக எடுத்துக் கூறுவார் எங்கள் தலைமை ஆசிரியர். சிறுவர் களாகிய எங்கள் உள்ளத்தில் அது நன்கு பதிந்து மெய் மறக்கச் செய்யும்.

அவர்தான் திரு. பெரியசாமித் தூரன் அவரைத் தமிழகம் நன்கு அறியும்.

தமிழில் கலைக்களஞ்சியம் உருவாவதற்கு முக்கிய பொறுப்பாளரில் ஒருவர், அதன் தலைமை ஆசிரியர் திரு. தூரன். அவர்களின் மாணவனுகிய எனக்கு மழலையர்களுக்கு அவரது படைப்பாகிய மழலை அமுதத்தை நமது குருகுலத்தின் மூலம் வெளியிடுவதை ஒரு பெரிய வாய்ப்பாகக் கருதுகிறேன்.

மழலைச் செல்வர்கள் பெரும்பயன் அடைவார்கள் என நம்புகிறேன்.

வேதாரண்யம் வே. அப்பாக்குட்டி,

18-12-81 நிர்வாக அறங்காவலர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மழலை_அமுதம்.pdf/4&oldid=1231066" இலிருந்து மீள்விக்கப்பட்டது