பக்கம்:மழலை அமுதம்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
நிலா




    குழந்தை —  நிலக் கடல் ஒரத்திலே
                   நிமிர்ந்து பார்த்த்து யாரோ?
      நிலா — பட்டு நிலா நான்தான் 
              பார்க்க வந்தேனே 
              கட்டித் தயிரைக் கடலில் ஊற்றிக் 
              காண வந்தேனே 
              கொட்டிக் கடலில் மல்லிகைப் பூவை 
              விட்டுப் பார்க்க வந்தேன் 
              வெள்ளிப் பணியைக் கடலில் தூவி 
              வேடிக்கை பார்க்க வந்தேன் 
              துள்ளித் திரியும் குழந்தை நீயும் 
              தூங்கச் சென்றிடுவாய்
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மழலை_அமுதம்.pdf/7&oldid=1073826" இலிருந்து மீள்விக்கப்பட்டது