பக்கம்:மஹாவீரர்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6

மஹா வீரர்

ப்ராஹ்பனர்களால் வஸிக்கப்பட்ட ப்ரதேசத்தில், ஜாரந்தராயண கோத்ரத்தில் பிறந்த தேவ நந்தா என்றவளுக்கும் கோடல கோத்ரத்தில் பிறந்த ரிஷபதத்தரென்ற ப்ராஹ்மணனுக்கும் புத்தராய்ப் பிறக்க உத்தேசித்தார். தன் தாயின் கர்ப்பத்தில் ப்ரவேசித்து 82 தினங்கள் ஆன பிறகு 83-வது தினத்தில், தேவேந்திரன் தீர்த்தங்கரர்கள் லோகத்தில் அவதாரஞ் செய்யும் பொழுது அனுஷ்டிக்கும் க்ரமததை நினைத்து வர்ஷத்தி 3-வது மாஸம் ஐந்தாவது பக்ஷம் (அதாவது) ஆச்வின கிருஷ்ணபக்ஷம்) திரயோதசி திதியில் உத்தரபால்குனி நக்ஷத்ரத்தில், அந்த கர்ப்பத்தைக் குந்தபுரத்தின் தெற்கு பாகத்தில் ப்ராஹ்மணர்களால் வஸிக்கப்பட்ட ஸ்தலத்திலிருந்து வடதுபாகத்தில் க்ஷத்ரியர்களால் வஸிக்கப்பட்ட பாகத்திற்கு ஆகர்ஷித்து, ஞா திரு வம்சத்தில் காச்யப கோத்திரத்தில் பிறந்த ஸித்தார்த்தரென்ற க்ஷத்திரியருடைய பார்யையான வஸிஷ்ட கோத்ரத்தில் பிறந்த த்ரிசலாவென்ற உத்தமியின் கர்ப்பத்தில் வைத்து, அவளுடைய கர்ப்பத்திலிருந்த சிசுவை தேவாநந்தையின் கர்ப்பத்தில் ஆகர்ஷித்து வைத்தானென்று ஆசாராங்க ஸுத்தத்திலும் கல்பஸுத்ரத்திலும் சொல்லப்படுகி-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மஹாவீரர்.pdf/11&oldid=1320842" இலிருந்து மீள்விக்கப்பட்டது