86
மாஜி கடவுள்கள்
காத்துக்கொண்டிருந்தது. அச்சமயம் வந்து சேர்ந்தான் ப்யேடன். அன்புடன் அபாலோ, அவனை அருகழைத்து, “மகனே! என்னவேண்டும்? எங்கே வந்தாய்?” என்று கேட்டான். “கெடுமதி படைத்தவனொருவன் கேலி பேசுகிறான் தந்தையே! நான் தங்கள் குமாரன் என்பதை நிரூபிக்க ஆதாரம் வேண்டுமாம்” என்றான். “ஆதாரமா! விண்ணும் மண்ணும் அறிய நான் கூறுகிறேன், நீ என் மகன் என்று” என்றான் அபாலோ. ப்யேடன் அவசர புத்தியுள்ளவன்—எனவே அவனுக்கு ஒரு பைத்தியக்காரத்தனமான யோசனை உதித்தது. தந்தையே! இன்று ஒரு நாள், நான் தங்களுக்குப் பதிலாகத் தேர் ஓட்டிச் செல்ல அனுமதி அளிக்க வேண்டுகிறேன்—அப்போது அனைவரும் அறிந்து கொள்வர், நான் யார் என்பதை—என்றுரைத்தான். அபாலோ திகைத்துப்போனான். “மகனே! ஆபத்தான விளையாட்டு வேண்டாம். என்னால் தவிர வேறு ஒருவரால், இந்தப் புரவிகளை அடக்கிச் செலுத்த முடியாது, விபரீதமான காரியம் வேண்டாம். வேறு எதுவாயினும் கேள், தருகிறேன்” என்று கொஞ்சுமொழி கூறினான்—மகன் கேட்கவில்லை. பிடிவாதக்காரன்! எது கேட்டாலும் தருகிறேன் என்று முதலிலேயே வாக்களித்துவிட்டான் அபாலோ. தவற முடியுமா? அதிலும், ஸ்டைக்ஸ் நதியின் மீது ஆணையிட்டு வாக்களித்துவிட்டான்—அதை மீறுவது பெரும் ஆபத்து. ஏனெனில், மீறுபவர் அந்த ஆற்றுநீரைப் பருகவேண்டும்—பருகினதும் ஓராண்டுக் காலம் முழு முட்டாளாகிவிடுவர்—பிறகு ஒன்பதாண்டு கடவுளுலகிலிருந்து தள்ளி வைக்கப்படுவர். எனவே அபாலோ இணங்குவது தவிர வேறு வழியில்லை. புத்திமதி சொன்னான்—சவுக்கை எடுக்காதே—பாதைமீது பார்வை இருக்கட்டும்—பக்குவமாக ஓட்டு,—என்று பலப்பல கூறி, ப்யேடனைத் தேரில் அமர்த்தினான். காலைத் தட்டிக்கொண்டு கிளம்பின குதிரைகள். இரண்டொரு மணி