இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
88
மாஜி கடவுள்கள்
சூரியகாந்திப் பூ, சூரியனை நோக்கியபடியே இருப்பது இதனால்தான் என்கிறான் புராணிகன்.
அபாலோவுக்கு இசையிலும் நிபுணத்துவம் உண்டு–மைடாஸ் என்ற அரசன் அபாலோவைவிட நேர்த்தியான இசைவாணன் உண்டு என்று சொன்ன குற்றத்துக்காக, அந்த அரசனுக்குக் ‘கழுதைக்காது’ வளரும்படி ஒரு முறை அபாலோ சபித்துவிட்டானாம்.
இந்த ‘சூரியபுராணம்’ கிரேக்கரின் புண்ய கதையாக இருந்துவந்தது, நெடுங்காலம்.
அபாலோ தேவனுக்கு பிரம்மாண்டமான கோயில்களைக் கட்டினர், கிரேக்கர்கள். பூஜைகள் விமரிசையாக நடந்துவந்தன, அபாலோ தேவனுக்கு. கவிதைக்குக் குறைவில்லை! எல்லா வைபவமும் இருந்துவந்தது, அபாலோவுக்கு, மக்கள் புத்தறிவு பெறும் வரையில். பிறகோ, பழமையை, புரட்டை, பூஜாரியின் பொய்யுரையைச் சுட்டெரித்த அறிவுச் சுடர் தோன்றிற்று—அபாலோ மாஜி கடவுளானான்.
❖