உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மாஜி கடவுள்கள், அண்ணாதுரை.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.


அபாலோவின் உடன்பிறந்தவள்தான் ஆர்ட்டிமிஸ். அபாலோ சூரியதேவன், அதுபோல, ஆரட்டிமிஸ் சந்திரக்கடவுள். அபாலோ போலவே அழகு, ஆர்ட்டிமிசிடம் குடி கொண்டிருந்தது. தேவருலகு பெருமூச்செறிந்தது அவளை எண்ணி எண்ணி. அவளோ கன்னியாகவே காலந் தள்ள உறுதிகொண்டு, ஜூவசிடம் வாதாடி, வரம் பெற்றுவிட்டாள்.

ஆர்ட்டிமிஸ்

லாடோனாவுக்கு இரட்டைக் குழந்தைகளல்லவா பிறந்தன—ஆண்தான் அபாலோ—ஆர்ட்டிமிஸ், பெண். அபாலோ சூரியதேவன், அதுபோல, ஆர்ட்டிமிஸ் சந்திரக் கடவுள். பகலெல்லாம் தேர் ஏறிச்சென்று சூரிய ஒளியைத் தருபவன் அபாலோ, உடன்பிறந்தாளாகிய ஆர்ட்டிமிஸ் இரவில் ரதமேறி சந்திர ஒளியை வழங்குபவள். இவ்வளவு அற்புதமான செயல் புரிந்துவரும் இருவரைப் பெற்றதனால் களிப்புற்றாள் லாடோனா. நாளாவட்டத்திலே இந்தக் களிப்பு, கர்வமாக மாறலாயிற்று. யாரே எனக்கெதிரே அவனியிலே, என்று கூறிக் கொள்ளலானாள்.

நையோபி என்ற மாது நகைத்தாள். அசடே! உனக்கு இருமக்கள்—எனக்கு பதினான்கு—ஏழு ஆண்,