ஆர்ட்டிமிஸ்
91
பெற்றுவிட்டாள். அழகு வீணாகிறதே என்ற ஏக்கம், தேவர்களுக்கு. என்ன செய்வது, ஜூவசே வரம் அளித்துவிட்டாரே!
கன்னியாக இருக்க வரம் பெற்றாளே தவிர, ஆர்ட்டிமிசுக்குக் காதலே உதிக்கவில்லை என்று எண்ணாதீர்கள்.
கோரியா நாட்டிலே, ஒரு ஆடு மாடு மேய்க்கும் இளைஞன் மீது, ஆர்ட்டிமிசுக்குக் காதல்—தற்செயலாக
அவன் ஓர் மலையடிவாரத்திலே படுத்துறங்குகிறான். ஆர்ட்டிமிஸ் விண்ணுலகைவிட்டுக் கிளம்பி நிலவொளியைப் பரப்பிக்கொண்டு செல்கிறாள், ரதத்தில். தற்செயலாகக் கீழே பார்க்க, கட்டழகன் கண் அயர்ந்திருக்கக் கண்டு, காதல் கொண்டு விடுகிறாள்—நொடிப்பொழுதில் கீழே வருகிறாள்—அவனை எழுப்பவில்லை—அன்பின் அறிகுறியாக அவன் உதடுகளில் முத்தமிடுகிறாள். இன்பமயமான உணர்ச்சியுடன் இளைஞன், இலேசாகக் கண்களை திறந்து பார்க்கிறான், அவன் மனதை மயக்கும் அழகிய இளமங்கை தெரிகிறாள், அடுத்த விநாடி மறைகிறாள். கனவா, நனவா?—திகைக்கிறான் இளைஞன்! மனதிலே இந்தக் கேள்வி குடைகிறது—முத்தமிட்டாளே—யார்...? ஏக்கத்துடன் யோசிக்கிறான். மனம் குழம்புகிறது. நித்திரையில் வந்து நெஞ்சில் இடம் கொண்ட நேரிழையாள் யாரோ, அறியேன்—அந்தரம் விட்டிறங்கி அழகுத்தேவதை வந்து, அதரம் தனில் அதரம் பதித்த அற்புதம் யாரோ தெரியேன் என்று பலப் பலவாறு எண்ணுகிறான், ஏங்குகிறான். ஆர்ட்டிமிசோ, தேர் ஓட்டிக்கொண்டிருக்கிறாள். அவளுடைய நினைவால் நைந்து உருகும் இளைஞன் பெயர், எண்டிமியான். கன்னியின் இதயத்திலே காதல் முளைத்தது கண்ட ஜூவஸ், எண்டிமியானைச் சும்மா விடுவாரா! அவரோ வரம் அளித்துவிட்டார், ஆர்ட்டிமிசுக்கு, கன்னி-