92
மாஜி கடவுள்கள்
யாக இருந்துவிட—இவனோ, கன்னி உள்ளத்திலே காதல் அரும்பிடச் செய்துவிட்டான்—வரம் என்ன கதியாவது! பிடி சாபம் என்றார் ஜுவஸ். மரணம்—அல்லது நீங்காத நித்திரை—எது வேண்டும், கேள்—என்றார்—நீங்காத நித்திரை!—என்றான் எண்டிமியான்—அன்று முதல், லாட்மஸ் மலைக்குகையிலே, தூங்கியவண்ணம் இருக்கிறான் எண்டிமியான். ஆர்ட்டிமிஸ் இரவுக் காலங்களில் அவனைக் கண்டுவிட்டுப் போகிறாள், ஆனால் அவன் விழித்துக் கொள்வதில்லை! இப்படி ஒரு காதல் ஆர்ட்டிமிசுக்கு.
ஓரியான் என்ற ஒரு வேட்டையாடும் இளைஞன் மீது ஆர்ட்டிமிசுக்குக் காதல் பிறந்தது, மற்றோர் சமயம்—இதுவும் பலிக்கவில்லை. ஒரு நாள், இந்த ஓரியான் ஏழுவன் தேவதைகளைக் கண்டு, சொக்கிவிட்டான்—அவர்களைத் துரத்தினான்! தேவதைகள், ஆர்ட்டிமிசை வேண்டிட ஆர்ட்டிமிஸ், அவர்களைப் புழுக்களாக மாற்றி, பிறகு நட்சத்திரங்களாக்கினார்.
ஓரியானைக் கண்டது இந்தவிதமாக.
வனதேவதைகள் கிடைக்காததால், ஓரியான் மனம் உடைந்து போகவில்லை, வேறு தேடினான்—ஒரு மன்னன் மகள் மீது மையல் கொண்டு அவளைக் களவாடிச் செல்ல முயன்றான்—மன்னன் அவன் கண்களைக் கெடுத்துவிட்டான். பிறகு சூரியன் அருளால் பார்வையைத் திரும்பப் பெற்றான்.
இந்த ஓரியான் மீது ஆர்ட்டிமிசுக்குக் காதல்!
இருவரும் நண்பர்களாயினர்—இது தெரிந்தது அபாலோவுக்கு, உடன்பிறந்தாளுக்கு ஏற்பட்ட காதல் பொறுத்தமற்றது என்று எண்ணி, அதைத் தடுக்கத்